ta_tw/bible/other/vine.md

2.6 KiB

கொடி, கொடிகள்

விளக்கம்:

“கொடி” என்பது தரையில் படர்ந்தோ அல்லது மரம் அல்லது கட்டிடத்தின் மீது படர்ந்தோ வளருகின்ற ஒரு தாவரத்தைக் குறிக்கும். வேதாகமத்தில் “கொடி” என்ற வார்த்தையானது, கனிகள் கொடுக்கும் கொடிகளையும், அதிலும் எப்பொழுதுமே திராட்சைக் கொடிகளையுமே குறிக்கிறது.

  • வேதாகமத்தில், “கொடி” என்ற வார்த்தை அனேகமாக எப்பொழுதும் “திராட்சைக்கொடியையே” குறிக்கிறது.
  • திராட்சைக்கொடியின் கிளைகள், வளருவதற்காக, அவைகளுக்குத் தண்ணீர் மற்றும் இதர சத்துக்களைக் கொடுக்கும் தண்டுடன் இணைந்திருக்கின்றன.
  • இயேசு தன்னை “திராட்சைச் செடி” என்றும், அவருடைய மக்களை “கிளைகள்” என்றும் அழைத்தார். இந்தப் பின்னணியத்தில், “கொடி” என்ற வார்த்தையை “திராட்சைக் கொடியின் தண்டு” அல்லது “ திராட்சைச் செடியின் தண்டு” என்றும் மொழிபெயர்க்கலாம். (பார்க்க: உருவகம்)

(மேலும் பார்க்க: திராட்சை, திராட்சைத் தோட்டம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5139, H1612, H8321, G288, G290, G1009, G1092