ta_tw/bible/other/water.md

7.0 KiB

தண்ணீர், தண்ணீர்கள், நீர்ப்பாய்ச்சப்பட்ட, நீர்ப்பாய்ச்சுதல்

விளக்கம்:

அடிப்படையான அர்த்தத்தோடு, “தண்ணீர்” என்பது பொதுவாக கடல், ஏரி, அல்லது ஆறுகள் ஆகியவற்றை குறிக்கிறது.

  • தண்ணீர்கள்” என்ற பதம் “நீர்நிலைகள்” அல்லது “அநேக நீர் ஆதாரங்கள்” ஆகியவற்றைக் குறிக்கின்றன. இது திரளான தண்ணீருக்கு பொதுவான மேற்கோள்குறிப்பு ஆகும்.
  • “தண்ணீர்கள்” என்பதன் உருவகப் பயன்பாடானது, பெரும் துன்பம், கஷ்டங்கள், துயரங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. உதாரணமாக, “நாம் தண்ணீர்களைக் கடந்து செல்லும்போது” அவர் நம்மோடு இருப்பதாக தேவன் வாக்களிக்கிறார்.
  • “திரளான தண்ணீர்கள்” என்ற சொற்றொடரானது, துன்பங்கள் எவ்வளவு பெரியது என்பதை வலியுறுத்துகிறது.
  • வீட்டு மிருக ஜீவன்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் “தண்ணீர் காட்டுதல்” என்பது “அவைகளுக்குத் தண்ணீர் கொடுத்தல்” என்று பொருளாகும். வேதாகம நாட்களில், பொதுவாக இது, வாளிகளினால் கிணற்றிலிருந்து நீர் இறைத்து தண்ணீர் தொட்டி அல்லது வேறு பாத்திரங்களில் மிருகங்கள் குடிப்பதற்காக ஊற்றுவதோடு சம்பந்தப்படுகிறது.
  • பழைய ஏற்பாட்டில், தேவன், தனது மக்களுக்காக “ஜீவனுள்ள தண்ணீருள்ள” ஊற்றாக குறிப்பிடப்படுகிறார். அவரே ஆவிக்குரிய வல்லமையின் ஊற்றாகவும், உற்சாகத்தின் ஊற்றாகவும் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
  • புதிய ஏற்பாட்டில், இயேசு “ஜீவத்தண்ணீர்” என்ற சொற்றொடரை, ஒரு மனிதனுக்குள் கிரியை செய்து, அவனுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்துகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • “தண்ணீர் இரைத்தல்” என்ற சொற்றொடரை “வாளியைப் பயன்படுத்திக் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியே கொடுவருதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • அவர்களிலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் பாய்ந்தோடும்” என்ற வாக்கியத்தை “பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையும் ஆசீர்வாதங்களும் அவர்களிடமிருந்து பாய்ந்தோடுகிறது”என்று மொழிபெயர்க்கலாம். “ஆசீர்வாதங்கள்” என்பதற்குப் பதிலாக “வரங்கள்” அல்லது “கனிகள்” அல்லது “தெய்வீக குணாதிசயங்கள்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
    • இயேசு, கிணற்றினருகே சமாரியப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பயன்படுத்திய “ஜீவத்தண்ணீர்” என்ற சொற்றொடரை “வாழ்வைக் கொடுக்கும் தண்ணீர்” அல்லது “வாழ்வு கொடுக்கும் தண்ணீர்” என்று மொழிபெயர்க்கலாம். இந்தப் பின்னணியில், தண்ணீர் என்ற வார்த்தையின் மொழிநடையை மொழிபெயர்ப்பில் உள்ளடக்க வேண்டும்.
  • இந்தப் பின்னணியின் அடிப்படையில், “தண்ணீர்கள்” அல்லது “திரளான தண்ணீர்கள்” என்ற வார்த்தையை “பெரும் துன்பம் (தண்ணீரைப் போல் உங்களைச் சுற்றியுள்ள)” அல்லது “மேற்கொள்ளும் கஷ்டங்கள் (பெருவெள்ளத்தைப்போல)” அல்லது “அதிக அளவிலான தண்ணீர்” என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: வாழ்க்கை, ஆவி, பரிசுத்த ஆவியானவர், வல்லமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2222, H4325, H4529, H4857, H7301, H7783, H8248, G504, G4215, G4222, G5202, G5204