ta_tw/bible/other/warrior.md

3.6 KiB

இராணுவ வீரன், இராணுவ வீரர்கள், போர்வீரன், போர்வீரர்கள்

உண்மைகள்:

“போர்வீரன்”, “இராணுவ வீரன்” என்ற இரண்டு பதங்களுமே இராணுவத்தில் சண்டையிடும் ஒரு நபரைக் குறிப்பவைகளாகும். ஆனால் சில வித்தியாசங்களும் இருக்கின்றன.

  • வழக்கமாக “போர்வீரன்” என்ற பதம், யுத்தகளத்தில் திறமையுள்ள மற்றும் தைரியமுள்ள மனிதனைக் குறிக்கும் பொதுவான, பரந்த அர்த்தமுள்ள வார்த்தையாகும்.
  • யேகோவா தேவன் “போர்வீரனாக” உருவகமாகச் சொல்லப்படுகிறார்.
  • “இராணுவவீரன்” என்ற பதம் , ஒரு குறிப்பிட்ட இராணுவத்தைச் சேர்ந்த அல்லது குறிப்பிட்ட யுத்தத்தில் போரிடுகிற ஒரு நபரைக் குறிக்கிறது.
  • எருசலேமில் இருந்த ரோம இராணுவ வீரர்கள் , சட்டத்தைப் பாதுகாக்கிறவர்களாகவும் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்குமுன்பு அவரை காவல்காத்தனர். மேலும் சிலர் அவருடைய கல்லறையை காவல்காக்கும்படி பணிக்கப்பட்டனர்.
  • “போர்வீரன்”மற்றும் “இராணுவ வீரன்” என்ற இரண்டு வார்த்தைகள் இந்த மொழிபெயர்ப்பு திட்டத்தில் இருந்தாலும், அவைகள் வெவ்வேறு அர்த்தத்தையும் பயன்பாட்டையும் கொண்டிருக்கின்றன என்பதை மொழிபெயர்ப்பாளர் கள் கருத்தில்கொள்ள வேண்டும்.

(மேலும் பார்க்க: தைரியம், சிலுவையிலறை, ரோம், கல்லறை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: , H352, H510, H1368, H1416, H1995, H2389, H2428, H2502, H3715, H4421, H5431, H5971, H6518, H6635, H7273, H7916, G4686, G4753, G4754, G4757, G4758, G4961