ta_tw/bible/other/courage.md

7.6 KiB

தைரியம், தைரியமான, ஊக்குவிக்க, ஊக்கம், தைரியம்கொள், அதைரியப்படுத்து, அதைரியப்படுத்தப்பட்ட, அதைரியப்படுத்து, அதைரியப்படுத்துதல்

உண்மைகள்:

"தைரியம்" என்பது துணிவுடன் எதிர்கொள்ளுதல் அல்லது கடினமான, பயமுறுத்தும் அல்லது ஆபத்தான ஒன்றைச் செய்தல் என்று குறிப்பிடுகிறது.

  • "தைரியயமாக இருத்தல்" என்பது பயப்படும்நிலையில் அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ள அழுத்தம் இருக்கும்போது கூட சரியானதைச் செய்யும் துணிவைக் காட்டும் ஒருவரை விவரிக்கிறது,.
  • வலிமை மற்றும் விடாமுயற்சியுடன் உணர்ச்சி ரீதியிலான அல்லது உடல் ரீதியிலான வலியை எதிர்கொள்கையில் ஒருவர் தைரியத்தைக் காட்டுகிறார்.
  • "தைரியம்" என்பதன் அர்த்தம், "பயப்பட வேண்டாம்" அல்லது "விஷயங்கள் நன்றாக மாறும் என்று உறுதியளிப்பது என்பதாகும்"
  • ஆபத்து நிறைந்த கானானின் நிலத்திற்கு யோசுவா நுழைவதற்கு தயாரானபோது, ​​மோசே "வலிமையுடனும் தைரியத்துடனும்" இருக்கும்படி அவரை அறிவுறுத்தினார்.
  • "தைரியமான" என்ற வார்த்தையை "வீரமான" அல்லது "பயமற்ற" அல்லது "துணிவான" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சூழலைப் பொறுத்து, "தைரியமாக இரு,என்பதை "மனதளவில் வலுவாக இருங்கள்" அல்லது "நம்பிக்கையுடன் இருங்கள்" அல்லது "உறுதியான நிலைப்பாடு கொண்டிரு" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "தைரியத்துடன் பேசு" என்பதை "தைரியமாக பேசுங்கள்" அல்லது "பயப்படாமல் பேசுங்கள்" அல்லது "நம்பிக்கையுடன் பேசுங்கள்" என மொழிபெயர்க்கலாம்.

"உற்சாகப்படுத்து மற்றும் உற்சாகம் என்ற வார்த்தைகள் "யாராவது ஒருவருக்கு ஆறுதல், நம்பிக்கை, திடநம்பிக்கை மற்றும் தைரியம் கொடுக்கும்படியாக விஷயங்களை சொல்லி வார்த்தைகள் மூலமாக அல்லது செயல்கள் மூலமாக ஊக்கப்படுத்துவதாகும்.

  • இதேபோன்ற ஒரு சொல் "புத்திசொல்" ஆகும், அதாவது ஒருவரிடம் தவறான செயலை நிராகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதும், அதற்கு பதிலாக நல்லதும், சரியானதுமானசெயலை செய்யத் தூண்டுவதாகும்.
  • அப்போஸ்தலனாகிய பவுலும் புதிய ஏற்பாட்டின் மற்ற ஆசிரியர்களும் ஒருவரையொருவர் நேசிப்பதற்கும் சேவை செய்வதற்கும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படி கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுத்தார்கள்.

"சோர்வடையச்செய்தல்" என்ற வார்த்தை, மக்கள் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் இழக்கச் செய்யும் காரியங்களைச் சொல்வதையும், அதையொத்த செயல்களையும் செய்வதும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு கடினமாக உழைக்க ஆசைப்படுவதைக் குறிக்கின்றன.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • சூழ்நிலையைப் பொறுத்து, "ஊக்குவிக்க என்பதை" மொழிபெயர்க்கும் வழிகள் "ஊக்கம்" அல்லது "ஆறுதல்" அல்லது "கனிவான வார்த்தைகளை கூறுதல்" அல்லது "உதவி மற்றும் ஆதரவு கொடுத்தல்" ஆகியவை அடங்கும்.
  • "உற்சாகமூட்டும் வார்த்தைகளை பேசுதல் என்ற சொற்றொடரின் " அர்த்தம் "மற்றவர்கள் தாங்கள் நேசிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளப்படுவதை, , வலுவூட்டப்படுவதை உணரும்படியாக வார்த்தைகளைக் கூறுவதாகும் .

(மேலும் காண்க: நம்பிக்கை, புத்திசொல், பயம், பலம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H533, H553, H1368, H2388, H2388, H2428, H3820, H3824, H7307, G2114, G2115, G2174, G2292, G2293, G2294, G3870, G3874, G3954, G4389, G4837, G5111