ta_tw/bible/kt/exhort.md

3.7 KiB

உற்சாகப்படுத்து, உற்சாகப்படுத்துதல்

வரையறை:

" உற்சாகப்படுத்து " என்ற வார்த்தை வலுவாக உற்சாகப்படுத்தி, சரியானதைச் செய்ய யாரையாவது ஊக்கப்படுத்துகிறது. அத்தகைய ஊக்கம், " உற்சாகப்படுத்துதல்" என்று அழைக்கப்படுகிறது.

  • மற்றவர்களை பாவத்தை விட்டுவிடுவதற்கும், தேவனுடைய சித்தத்தை பின்பற்றுவதற்கும், அவர்களைத் தூண்டுவதே புத்திமதி கூறுவதன் நோக்கமாகும்.
  • புதிய ஏற்பாடு ஒருவருக்கொருவர் அன்புடன், கடுமையாக அல்லாமல் அல்லது திடீரென அல்ல, ஒருவருக்கொருவர் புத்திசொல்லும்படி கிறிஸ்தவர்களுக்கு போதிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலைப் பொறுத்து, "புத்திசொல்" என்பது "வலுவாக ஊக்குவிக்கப்படுதல்" அல்லது "தூண்டுதல்" அல்லது "அறிவுரை" கொடுத்தல் என மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பானது கோபத்துடன் அறிவுரை கூறுவதைப்பற்றி அர்த்தப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். இந்த வார்த்தை வலிமை மற்றும் தீவிரத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும், ஆனால் கோபமான உரையைப் பயன்படுத்தக்கூடாது.
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், "ஊக்கப்படுத்துதல்" என்ற வார்த்தையை "உற்சாகப்படுத்துவதை" விட வேறு விதமாக மொழிபெயர்க்க வேண்டும், அதாவது இது ஊக்குவிக்கும், தூண்டுவது அல்லது ஆறுதலளிப்பதாகும்.
  • வழக்கமாக இந்த வார்த்தை வேறு விதமாக "திருத்துதல் என்று " மொழிபெயர்க்கப்படும், அதாவது அவருடைய தவறான நடத்தைக்கு யாராவது எச்சரிக்கை செய்யவோ அல்லது திருத்தவோ செய்யலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G3867, G3870, G3874, G4389