ta_tw/bible/other/qualify.md

3.0 KiB

தகுதி, தகுதியுள்ள, தகுதியற்ற

வரையறை:

"தகுதி" என்ற சொல் சில நன்மைகள் பெற அல்லது சில திறன்களைக் கொண்டிருப்பதை அங்கீகரிக்க உரிமை பெறுவதை குறிக்கிறது.

  • ஒரு குறிப்பிட்ட வேலைக்கு "தகுதியுள்ள" ஒரு நபர் அந்த வேலை செய்ய தேவையான திறன்கள் மற்றும் பயிற்சி உடையவராவார்.
  • கொலோசெயர் சபைக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: "பிதாவானவர் தம்முடைய வெளிச்சமுடைய ராஜ்யத்தில் பங்குகொள்ள விசுவாசிகளுக்கு தகுதியுள்ளவர்" என்று எழுதினார். தேவனுடைய வாழ்க்கையை வாழ வேண்டிய அனைத்தையும் தேவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் என்பதாகும்.
  • தேவனுடைய ராஜ்யத்தின் பாகமாக இருப்பதற்கு விசுவாசி சம்பாத்தியத்தால் பெற முடியாது. ஏனெனில் அவர் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • சூழலை பொறுத்து, "தகுதி" என்பது "பொருத்தப்பட்ட" அல்லது "திறமையானது" அல்லது "இயன்ற" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தகுதியுள்ளவராக்கு என்பதை "தகுதிப்படுத்து" அல்லது "ஊக்கப்படுத்த" அல்லது "அதிகாரம்கொடு" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: கொலோசெ, தெய்வீகமான, இராச்சியம், ஒளி, பவுல், மீட்டுக் கொள்ளுதல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3581