ta_tw/bible/other/generation.md

4.2 KiB

தலைமுறை

வரையறை:

"தலைமுறை" என்ற வார்த்தை, ஒரே காலகட்டத்தில் பிறக்கக்கூடிய ஒரு குழுவினரை குறிக்கிறது.

  • ஒரு தலைமுறை காலத்தின் இடைவெளியைக் குறிப்பிடலாம். வேதாகமக் காலங்களில், ஒரு தலைமுறை பொதுவாக சுமார் 40 ஆண்டுகளாக கருதப்பட்டது.
  • பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இரண்டு வெவ்வேறு தலைமுறைகளாக உள்ளனர்.
  • வேதாகமம், "தலைமுறை" என்ற வார்த்தை பொதுவான குணங்களைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு பொதுவாகக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • "இந்தத் தலைமுறை" அல்லது "இந்தத் தலைமுறையினர்" என்ற சொற்றொடரை "இப்போது வாழும் மக்கள்" அல்லது மக்களாகிய "நீங்கள் " என்று மொழிபெயர்க்கலாம்.
  • "இந்தப் பொல்லாத சந்ததியாரும்"என்பதை இப்பொழுது "இந்த பொல்லாத ஜனங்கள் இப்பொழுது வாழ்கிறார்கள். என்று மொழிபெயர்க்கலாம்.
  • "தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு" அல்லது "ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததாக" என்ற சொற்றொடரை "இப்போது வாழும் மக்கள், அதேபோல் அவர்களது குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்" அல்லது "ஒவ்வொரு காலத்திலும் உள்ளவர்கள்" அல்லது " மற்றும் எதிர்கால காலம் "அல்லது" அனைத்து மக்களும் அவர்களுடைய சந்ததியும் ".என்று மொழிபெயர்க்கலாம்.
  • "வரப்போகிற சந்ததியார் அவருக்குப் பணிவிடை செய்வார்கள், ஆண்டவரைப்பற்றி அடுத்த தலைமுறையினருக்குச் சொல்வார்கள்", என்பதை "எதிர்காலத்திலே அநேக ஜனங்கள் கர்த்தரைச் சேவிப்பார்கள், அவர்கள் பிள்ளைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் அவரைப்பற்றி சொல்லுவார்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: சந்ததி, தீமை, மூதாதையர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு: