ta_tw/bible/other/decree.md

3.4 KiB

ஆணை, ஆணைகள்,கட்டளையிடப்பட்ட

வரையறை:

ஒரு ஆணை என்பது அனைத்து மக்களுக்கும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரகடனம் அல்லது சட்டமாகும்.

  • தேவனுடைய கட்டளைகளானது, நியமங்கள், பிரமாணங்கள், சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • சட்டங்கள் மற்றும் கட்டளைகளைப் போலவே, ஆணைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • ஒரு மனித ஆட்சியாளரால் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளைக்கு எடுத்துக்காட்டு, அகஸ்து இராயன் ரோமானியப் பேரரசில் வாழும் அனைவருமே மக்கள் தொகை கணக்கெடுப்பு கணக்கில் கணக்கிடப்படுவதற்காக தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பிரகடனப்படுத்தியதாகும்.
  • ஏதாவது ஒன்றைக் கட்டளையிட வேண்டும் என்பது கீழ்ப்படிவதற்காக கொடுக்கப்படும் கட்டளை ஆகும். இதை "ஆணையிடு" அல்லது "கட்டளை" அல்லது "முறையாக நிறைவேற்றப்படுபவை " அல்லது "வெளிப்படையாக ஒரு சட்டத்தை உருவாக்குவது" என்று மொழிபெயர்க்கலாம்.
  • நடைபெறும்படி கட்டளையிடப்படுதல் " என்பது , இது "நிச்சயம் நடக்கும்" அல்லது "முடிவு செய்யப்பட்டு, மாற்றப்படாது" அல்லது "இது நடக்கும் என்று முற்றிலும் அறிவித்தது" என்று அர்த்தம்.

(மேலும் காண்க: கட்டளை, அறிவிக்க, சட்டம், பிரகடனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H559, H633, H1697, H5715, H1504, H1510, H1881, H1882, H1696, H2706, H2708, H2710, H2711, H2782, H2852, H2940, H2941, H2942, H3791, H3982, H4055, H4406, H4941, H5407, H5713, H6599, H6680, H7010, H8421, G1378