ta_tw/bible/other/cypress.md

2.1 KiB

கேதுரு

வரையறை:

" கேதுரு " என்ற வார்த்தை வேதாகமக் காலங்களில் மக்கள் வாழ்ந்த பிராந்தியங்களில், குறிப்பாக மத்தியதரைக் கடலை எல்லையில் வாழும் நாடுகளிலுமுள்ள ஒரு வகையான மரத்தை குறிக்கிறது.

சீப்புரு மற்றும் லீபனோன் ஆகியவை கேதுரு மரங்களை அதிகமாக கொண்டிருந்ததாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரு இடங்களாகும். நோவா கட்டியிருந்த பேழை கேதுரு மரத்தாலானதாக இருந்திருக்கலாம்.

  • கேதுரு மரம் உறுதியானதாகவும், நீண்ட நாட்கள் நிலைத்திருப்பதாகவும் இருப்பதால், பண்டைய மக்களால் படகுகள் கட்டப்படுவதற்காகவும் மற்றும் பிற கட்டமைப்புகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டன.

(மேலும் காண்க: பேழை, சீப்புரு, முடி, லீபனோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8645