ta_tw/bible/names/cyprus.md

2.5 KiB

சீப்புரு

உண்மைகள்:

சீப்புரு என்பது மத்தியதரைக் கடலில் இருந்த ஒரு தீவு, இது நவீன துருக்கி நாட்டிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

  • பர்னனா சீப்புருவில் இருந்தார், அதனால் அவருடைய உறவினர் யோவான் மாற்கு கூட சீப்புருவைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம்.
  • பவுலும் பர்னபாவும் முதல் மிஷனரி பயணத்தின் ஆரம்பத்தில் சீப்புரு தீவில் ஒன்றாக போதித்தனர். அந்த பயணத்தில் அவர்களுக்கு உதவ யோவான் மாற்கு அவர்களுடன் இருந்தார்.
  • பின்னர், பர்னபாவும் மாற்கும் மீண்டும் சீப்புருவில் சந்தித்தார்கள்.
  • பழைய ஏற்பாட்டில், சீப்புரு தீவானது கேதுரு மரங்கள் நிறைந்த இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பர்னபா, யோவான் மாற்கு, கடல் )

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2953, G2954