ta_tw/bible/other/crown.md

6.2 KiB
Raw Permalink Blame History

கிரீடம், கிரீடங்கள், முடிசூட்டப்பட்ட

வரையறை:

ஒரு கிரீடம் என்பது அரசர்கள் மற்றும் ராணிகள் போன்ற ஆட்சியாளர்களின் தலையில் அணிந்த அலங்கார, வட்ட வடிவமான தலை அலங்காரமாகும். "கிரீடம்" என்ற வார்த்தை ஒருவரின் தலையில் ஒரு கிரீடம் வைக்க வேண்டும்; உருவக அர்த்தத்தில் "கனப்படுத்துதல்" என்று பொருள்.

  • கிரீடங்கள் வழக்கமாக தங்கம் அல்லது வெள்ளி ஆகியவற்றால் செய்யப்படுகின்றன, மேலும் அவை மரகதங்கள் மற்றும் வைடூரியம் போன்ற விலையுயர்ந்த கற்கள் அதில் பதிக்கப்படுகின்றன.
  • ஒரு கிரீடம் என்பது ஒரு அரசரின் செல்வத்திற்கும் வலிமைக்கும் அடையாளமாக இருக்க வேண்டும்.

மாறாக, ரோம வீரர்கள் இயேசுவின் தலையில் வைக்கப்பட்டிருந்த முள்ளுள்ள கொடிகளால் செய்யப்பட்ட கிரீடத்தை அவர்மேல் வைத்த செயல் அவரை பரிகாசம் செய்து அவரை காயப்படுத்துவதற்காகும்.

  • பண்டைய காலங்களில், தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஒலிவ கிளைகளால் பின்னப்பட்ட ஒரு கிரீடம் வழங்கப்படும். அப்போஸ்தலன் பவுல் இந்த கிரீடத்தை தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
  • உருவகமாக, "கிரீடம் அணிவித்தல்" என்பது ஒருவரை கனப்படுத்துவது என்று பொருளாகும்.. தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவரை மற்றவர்களிடம் புகழுவதினால் தேவனை கனப்படுத்துகிறோம் என்று பொருளாகும். இது அவருக்கு ஒரு கிரீடம் வைத்து, அவர் ராஜா என்று ஒப்புக்கொள்வதைப்போன்றதாகும்.
  • பவுல் சக விசுவாசிகளை "மகிழ்ச்சியும் கிரீடமும் என்று" அழைக்கிறார். இந்த வார்த்தைகளில், "கிரீடம்" என்பது, இந்த விசுவாசிகள் தேவனைச் சேவிப்பதில் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் பவுல் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டார், மதிக்கப்படுகிறார் என்பதை குறிக்க. உருவக அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • உருவக ரீதியாக"கிரீடம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டபோது, " "பரிசு" அல்லது "கனம்" அல்லது "வெகுமதி" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "கிரீடம்" என்பதன் உருவக அர்த்தம் "கனம்" அல்லது "அலங்கரித்தல்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • ஒரு நபர் "கிரீடம்" அணிவிக்கப்பட்டிருந்தால்” என்பதை, "ஒரு கிரீடம் அவருடைய தலையில் வைக்கப்பட்டது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது", என்ற சொற்றொடரை "மகிமையும் கௌரவமும் அவருக்கு அருளப்பட்டது" அல்லது "அவருக்கு மகிமையும் கனமும் வழங்கப்பட்டது" அல்லது "அவர் மகிமையும் கனமும் கொண்டவர்" என மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.

(மேலும் காண்க: மகிமை, ராஜா, ஒலிவ)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2213, H3803, H3804, H4502, H5145, H5849, H5850, H6936, G1238, G4735, G4737