ta_tw/bible/other/acknowledge.md

4.1 KiB

ஒப்புகொள்ளல், ஏற்றுக் கொண்டதை அறிக்கையிடுதல், உண்மையை ஏற்றுகொள்ளல், ஒத்துகொள்ளுதல், ஏற்றுக்கொண்டேன்.

உண்மைகள்:

“ஒப்புக்கொள்ளுதல்” என்ற வார்த்தை ஒரு சரியான ஒருவரையோ அல்லது ஒரு காரியத்தையோ அங்கீகரிப்பது என்று அர்த்தமாகும்.

  • தேவனை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுதல் என்பது அவர் சொல்வதை உண்மை என்பதை ஏற்றுக்கொண்டு அவைகளில் ஈடுபாடு காண்பிப்பதாகும்.
  • தேவனை அறிக்கையிடுபவர்கள், அவர்களுடைய கீழ்படிதலின் மூலம் வெளிப்படுத்துவது அவருடைய நாமத்துக்கு மகிமையை கொண்டு வரும்.
  • அறிக்கையிடுதல் என்பது உண்மையை நம்புவது, செயலினாலும் வார்த்தையினாலும் அவற்றை உறுதிப்படுத்துவது.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்

  • உண்மை என்று ஏற்றுக்கொண்ட காரியத்தை அறிக்கையிடுதல் என்ற சூழ்நிலையில், “அறிக்கையிடுதல்” என்பதை “ஒப்புக்கொள்ளல்” அல்லது “வெளிப்படையாக தெரிவித்தல்” அல்லது “உண்மையை அறிவித்தல்” அல்லது “நம்புதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • ஒருவர் ஏற்றுக்கொண்டதை அறிக்கையிட்டார் என்பதை குறிப்பிடும்போது, இந்த வார்த்தையை “ஏற்றுக்கொள்ளல்” அல்லது “அதன் மகத்துவத்தை அங்கீகரித்தார்” அல்லது “அவர் உண்மையுள்ளவர் என்று மற்றவர்களிடம் கூறுவது” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • தேவனைக்குறித்து அறிக்கையிடுதல் என்பதை “தேவனை நம்பி அவருக்கு கீழ்படிவது” அல்லது “தேவன் யார் என்பதை அறிக்கையிடுதல்” அல்லது “தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை மற்றவர்களுக்கு சொல்லுதல்” அல்லது “தேவன் எப்படிப்பட்டவர் என்றும் அவரது செய்கைகள் எவ்வளவு உண்மையானவை” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: கீழ்படி, மகிமை, இரட்சித்தல்)

வேத குறிப்புகள்

சொல் தரவு:

  • Strong's: H3045, H3046, H5046, H5234, H6942, G1492, G1921, G3670