ta_tw/bible/names/zephaniah.md

2.1 KiB

செப்பனியா

உண்மைகள்:

கூசியின் மகனாகிய செப்பனியா, எருசலேமில் வாழ்ந்த தீர்க்கதரிசி ஆவான். மேலும் அவன் இராஜாவாகிய யோசியா அரசாட்சி செய்யும் காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தான். இவன் எரேமியா வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்தான்.

  • இவன், யூதாவின் மக்கள் பொய்யான தெய்வங்களை ஆராதித்ததற்காக அவர்களைக் கடிந்துகொண்டான். இவனுடைய தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள செப்பனியா புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
  • பழைய ஏற்பாட்டில் செப்பனியா என்னும் பெயரையுடைய அநேக மனிதர்கள் இருந்தனர். அவர்களில் அநேகர் ஆசாரியர்களாக இருந்தனர்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: எரேமியா, யோசியா, ஆசாரியன்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H6846