ta_tw/bible/names/josiah.md

3.0 KiB

யோசியா

உண்மைகள்:

யோசியா யூதா ராஜ்யத்தை முப்பத்தொன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்த தேவ பக்தியுள்ள அரசன். அவர் யூதாவின் மக்களை மனந்திரும்பி ஆண்டவரை வணங்கும்படி வழிநடத்தினார்.

  • அவன் தகப்பனாகிய ஆமோன் கொல்லப்பட்டபின், எட்டு வயதில் யோசியா யூதாவின் மேல் ராஜாவானார்.
  • அவருடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், அரசனாகிய யோசியா ராஜாவின் ஆலயத்தை மீண்டும் கட்டும்படி பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்குக் கட்டளையிட்டார். இது நடந்து கொண்டிருந்தபோது, ​​நியாயப்பிரமான புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • நியாயப்பிரமாண சட்டங்கள் யோசியாவுக்கு வாசித்தபோது, ​​அவருடைய மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதற்கு அவர் துக்கப்படுகிறார். விக்கிரக வழிபாட்டின் எல்லா இடங்களும் அழிக்கப்பட்டு, பொய்க் கடவுட்களின் குருக்கள் கொல்லப்படும்படி அவர் கட்டளையிட்டார்.
  • மக்கள் மீண்டும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: பொய் கடவுள், யூதா, நியாயப்பிரமாணம், பஸ்கா, தேவாலயம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2977, G2502