ta_tw/bible/names/thessalonica.md

3.0 KiB

தெசலோனிக்கே, தெசலோனிக்கேயன், தெசலோனிக்கேயர்

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டு காலத்தில், தெசலோனிக்கே பண்டைய ரோம சாம்ராஜ்யத்தில் மக்கேதோனியாவின் தலைநகரமாக இருந்தது. அந்த நகரத்தில் வாழும் மக்கள் "தெசலோனிக்கேயர்" என்று அழைக்கப்பட்டார்கள்.

  • தெசலோனிக்கா நகரம் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது; ரோம சாம்ராஜ்யத்தின் கிழக்குப் பகுதிக்கு ரோம் இணைக்கப்பட்ட ஒரு பெரிய பாதையில் அமைந்திருந்தது.
  • பவுலும், சீலாவும் தீமோத்தேயுவும் சேர்ந்து, இரண்டாம் மிஷனரி பயணத்தில் தெசலோனிக்கேவுக்கு விஜயம் செய்தார்கள்; இதன் விளைவாக ஒரு தேவாலயம் அங்கு நிறுவப்பட்டது. பிறகு, பவுல் இந்த நகரத்தை தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தில் சந்தித்தார்.
  • தெசலோனிக்கேயில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் இரண்டு கடிதங்களை எழுதினார். இந்த கடிதங்கள் (1 தெசலோனிக்கேயர் மற்றும் 2 தெசலோனிக்கேயர்) புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: மக்கதோனியா, பவுல், ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2331, G2332