ta_tw/bible/names/michael.md

2.6 KiB

மிகாவேல்

உண்மைகள்:

தேவனுடைய பரிசுத்த, கீழ்ப்படிதலுள்ள தேவதூதர்களுக்கெல்லாம் தலைமை வகிப்பவர் மிகாவேல். தேவனுடைய "பிரதான தூதனாக" குறிப்பிடப்படுகிற ஒரே தேவதூதர் தான் அவர்.

  • "பிரதானதேவதூதன்" என்ற வார்த்தையின் அர்த்தம் "தலைமை தேவதூதன்" அல்லது "ஆளும் தேவதூதன்" என்று பொருள்.
  • மிகாவேல் தேவனுடைய எதிரிகளுக்கு எதிராகப் போராடுகிறார், தேவனுளுடைய மக்களைப் பாதுகாக்கிறார்.
  • பெர்சிய படைக்கு எதிராக போரிடுவதில் அவர் இஸ்ரவேலரை வழிநடத்தியவர். தானியேல் முன்னறிவித்தபடி, கடைசி நாட்களில் அவர் தீய சக்திகளுக்கு எதிராக இறுதி யுத்தத்தில் இஸ்ரவேலின் படைகளை வழிநடத்துவார்.
  • மிகாவேல் என்ற பெயரில் வேதாகமத்தில் பல ஆண்களும் உள்ளனர். பல ஆண்கள் " மிகாவேல் மகன்" என்று அடையாளம் காணப்படுகின்றனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: தேவதூதன், தானியேல், தூதர், பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4317, G3413