ta_tw/bible/names/luke.md

2.5 KiB

லூக்கா

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டின் இரண்டு புத்தகங்களையும் லூக்கா எழுதினார்: லூக்காவின் சுவிசேஷமும் அப்போஸ்தலர் புத்தகமும்.

  • கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் லூக்காவை மருத்துவர் என்று குறிப்பிடுகிறார். பவுல் தன்னுடைய மற்ற இரண்டு கடிதங்களில் லூக்காவை குறிப்பிடுகிறார்.
  • லூக்கா ஒரு கிரேக்க அறிஞராக இருந்தார். லூக்கா தனது சுவிசேஷத்தில், யூதர்கள் மற்றும் புறஜாதியாரான சகல ஜனங்களுக்கும் இயேசுவின் அன்பை முன்னிலைப்படுத்திய பல விவரங்களை லூக்கா குறிப்பிடுகிறார்.
  • லூக்கா தன்னுடைய மிஷனரி பயணத்தின்போது பவுலுடன் சேர்ந்து, தன்னுடைய வேலையில் அவருக்கு உதவினார்.
  • சில ஆரம்பகால சபை புத்தகங்களில், லூக்கா சிரியாவிலுள்ள அந்தியோகியா நகரில் பிறந்தார் என்று. கூறப்பட்டுள்ளது

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அந்தியோகியா, பவுல், சிரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு: