ta_tw/bible/names/joel.md

2.0 KiB

யோவேல்

உண்மைகள்:

யோவேல் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் ஆட்சியில் வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி. பழைய ஏற்பாட்டில் யோவேல் என்ற பெயரில் பல ஆண்களும் இருந்தனர்.

  • பழைய ஏற்பாட்டின் கடைசிப் பகுதியில் பன்னிரண்டு குறுகிய தீர்க்கதரிசன புத்தகங்களில் ஒன்று யோவேல் புத்தகம்.
  • யோவேல் தீர்க்கதரிசிக்கு சொந்தமான ஒரே தனிப்பட்ட தகவல் அவருடைய தந்தையின் பெயர் பெத்துவேல்.
  • பெந்தெகொஸ்தே நாளில் பிரசங்கத்தில், அப்போஸ்தலன் பேதுரு யோவேல் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: யோவாஸ், யூதா, பெந்தெகொஸ்தே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3100, G2493