ta_tw/bible/names/amalekite.md

3.6 KiB

அமலேக், அமலேக்கியர், அமலேக்கியர்கள்

உண்மைகள்:

அமலேக்கியர் என்பவர்கள் ஒரு வித நாடோடி மக்கள் கானானின் தெற்குப்பகுதியில் வாழ்ந்துவந்தனர், அரேபியா தேசத்தின் நெகெவ் பாலைவனத்தில் இருந்தது. இந்த ஜனக்கூட்டம் அமலேக்கிய சந்ததியிலிருந்து வந்தவர்கள், ஏசாவின் பேரன்.

  • அமலேக்கியர்கள் இஸ்ரவேலர்கள் கானானுக்கு வாழ வந்த நாள் முதல் அவர்களுக்கு பரம விரோதிகளாய் இருந்தனர்.
  • சிலநேரங்களில் “அமலேக்” என்ற வார்த்தை அமலேக்கியர்கள் எல்லோரையும் குறிக்க உருவகமாக பயன்படுதப்படுகிறது. (பார்க்கவும்: சினையாகுபெயர்
  • அமலேக்கியர்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தில், மோசே தனது கைககளை உயர்த்தினபோது, இஸ்ரவேலர்கள் வெற்றிகொண்டனர். அவனது கைகள் சோர்ந்து போய் தாழ்ந்த போது, அவர்கள் தோல்வியை தழுவினார்கள். ஆரோனும் ஊர் என்பவனும் மோசேயின் கைகளை அமலேக்கியர்களை தோற்கடிக்கும் வரை தாங்கிபிடித்தனர்.
  • சவுல் இராஜாவும் தாவீது இராஜாவும் அமலேக்கியர்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவிவிட்டார்கள்.
  • அமலேக்கியர்களை யுத்தத்தில் ஓருமுறை வென்றவுடன், சவுல் அங்கு கொள்ளையிட்ட சிலபொருட்களை மறைத்ததுடன் தேவன் கட்டளைக்கு கீழ்படியாவண்ணம் அமெலிக்கிய இராஜாவை கொல்லாமல் விட்டான்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: அரேபியா, தாவீது, ஏசா, நெகெவ், சவுல்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H6002, H6003