ta_tw/bible/kt/sonofman.md

4.7 KiB
Raw Permalink Blame History

மனுஷகுமாரன், மனுஷகுமாரன்

வரையறை:

"மனுஷகுமாரன்" என்ற பட்டப்பெயர் இயேசுவைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. அவர் "நான்" அல்லது "என்னை" என்று கூறி அதற்கு பதிலாக இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.

  • பைபிளில் "மனுஷ குமாரன்" ஒரு மனிதனைக் குறிப்பிடுவதோ அல்லது பேசுவதோ ஒரு வழியாக இருக்க முடியும். அது "மனிதனாகவும்" இருக்கலாம்.
  • எசேக்கியேல் பழைய ஏற்பாட்டின் புத்தகம் முழுவதும், தேவன் அடிக்கடி எசேக்கியேல் "மனுஷகுமாரன்" என உரையாற்றினார். உதாரணமாக அவர், "மனிதகுமாரே, நீ தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும்" என்றார்.
  • மேசியாவோடு வரும் "மனுஷகுமாரன்" என்ற தரிசனத்தை தானியேல் தீர்க்கதரிசி கண்டார்; அது வரும் மேசியாவைக் குறிக்கிறது.
  • மானிடமகன் மேகத்தில் ஒருநாள் வருவார் என்று இயேசு சொன்னார்.
  • மேகத்தின்மேல் வரும் மனிதகுமாரனுக்கு இந்த குறிப்புகள் இயேசு மேசியா கடவுள் என்று வெளிப்படுத்துகின்றன.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இயேசு "மனுஷகுமாரன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது "மனிதனாக மாறியவர்" அல்லது "பரலோகத்திலிருந்து வந்த மனிதன்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • சில மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது "நான்" அல்லது "என்னை" இந்த தலைப்புடன் ("நான், மனிதகுமாரன்" என) உள்ளபடி தெளிவாகக் கூறுகிறார்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு ஒரு தவறான பொருளை அளிக்காது என்பதை உறுதி செய்ய சரிபார்க்கவும் (சட்டவிரோத மகனைக் குறிப்பிடுவது அல்லது இயேசு ஒரு மனிதராக மட்டுமே இருந்தார் என்ற தவறான அபிப்பிராயத்தை கொடுக்கும்படி).
  • ஒரு நபரைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, "மனிதனின் மகன்" "நீ, ஒரு மனிதனாக" அல்லது "நீ, மனிதன்" அல்லது "மனிதனாக" அல்லது "மனிதனாக" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: பரலோகம், மகன், கடவுளின் மகன், யெகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H120, H606, H1121, H1247, G444, G5207