ta_tw/bible/kt/guilt.md

4.7 KiB

குற்றம், குற்றவாளி

வரையறை:

"குற்றம்" என்ற வார்த்தை பாவத்தை செய்ததாக அல்லது ஒரு குற்றத்தை செய்ததாக குறிப்பிடுகிறது.

  • "குற்றவாளியாக" என்பது அதாவது ஒழுக்க ரீதியில் தவறான ஒன்றைச் செய்திருக்க வேண்டும், அதாவது, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போவதாகும்.
  • "குற்றவாளி" என்பதற்கு எதிர்மறையான சொல் "அப்பாவி" ஆகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சில மொழிகள் "குற்றம்" அல்லது "பாவத்தின் அளவு" அல்லது "பாவத்தின் நிறை" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "குற்றவாளி" என்பதை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை "தவறாக" அல்லது "ஒழுக்க ரீதியில் தவறாக ஏதாவது செய்துவிட்டன" அல்லது "ஒரு பாவம் செய்திருக்க வேண்டும்" என்பதாகும்.

(மேலும் காண்க: அப்பாவி, அக்கிரமம், தண்டனை, பாவம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 39:2 இயேசுவைப் பற்றி பொய் சொல்லக்கூடிய பல சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்தார்கள். எனினும், அவர்களது அறிக்கைகள் ஒன்றுக்கொன்று ஒவ்வவில்லை, எனவே யூதத் தலைவர்கள் அவர் குற்றவாளி என்று நிரூபிக்க முடியவில்லை.
  • 39:11 இயேசுவிடம் பேசியபின், பிலாத்து மக்கள் கூட்டத்துக்கு முன்பாக, "இந்த மனிதரில் ஒரு குற்றத்தையும்_ நான் காணவில்லை." ஆனால் யூதத் தலைவர்களும் கூட்டத்தாரும், "அவரைச் சிலுவையில் அறையுங்கள்" என்று கூச்சலிட்டனர். பிலாத்து மறுமொழியாக, "அவர் __ குற்றவாளி __ அல்ல." ஆனால் அவர்கள் இன்னும் சத்தமாக கூச்சலிட்டனர். மூன்றாம் முறையாக பிலாத்து, "அவன் _ குற்றவாளி _ அல்ல!"
  • 40:4 இயேசு இரண்டு கொள்ளையர்களுக்கு இடையே சிலுவையில் அறையப்பட்டார். அவர்களில் ஒருவன் இயேசுவைப் பரியாசம்பண்ணினான், ஆனால் மற்றவன்: நீ தேவனுக்குப் பயப்படாதிருப்பாயோ? நாம்__ குற்றவாளிகள்__, ஆனால் இந்த மனிதன் அப்பாவி.
  • 49:10 உங்கள் பாவம் காரணமாக, நீங்கள் __ குற்றவாளிகள்__ மற்றும் இறக்க தகுதியுடையவர்கள்.

சொல் தரவு:

  • Strong's: H816, H817, H818, H5352, H5355, G338, G1777, G3784, G5267