ta_tw/bible/kt/dayofthelord.md

4.3 KiB

கர்த்தருடைய நாள், கர்த்தருடைய நாள்;

விளக்கம்:

பழைய ஏற்பாட்டில் "கர்த்தருடைய நாள்" என்பது தேவன் மக்களுடைய பாவத்திற்கு தண்டிக்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

  • புதிய ஏற்பாட்டு கால "கர்த்தரின் நாள்" என்பது பொதுவாக ஆண்டவர் இயேசு கடைசிக் காலத்தில் மக்களை நியாயந்தீர்க்க வரும் நாள் அல்லது நேரத்தை குறிக்கிறது.
  • இந்த இறுதியான, மற்றும் எதிர்கால நியாயத்தீர்ப்பின் நேரம் மற்றும் உயிர்த்தெழுதலின் நேரம் சில இடங்களில் "கடைசி நாளாக" குறிப்பிடப்படுகிறது. கர்த்தராகிய இயேசு மீண்டும் வந்து பாவிகளுக்கு நியாயஞ்செய்யும்பொழுது அவருடைய ஆட்சி நிரந்தரமாக நிலைநாட்டப்படும்போது இந்த நேரம் துவங்கும்.
  • இந்த சொற்றொடர்களில் "நாள்" என்ற வார்த்தையை சில சமயங்களில் சொல்லர்த்தமான நாளையே குறிக்கலாம் அல்லது அது ஒரு நாளுக்கு மேலாக "நேரம்" அல்லது "சந்தர்ப்பம்" என்பதை குறிக்கலாம்.
  • சில நேரங்களில் தண்டனை என்பது விசுவாசிக்காதவர்களின் மீது "கடவுளுடைய கோபத்தை ஊற்றுவதை" குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழ்நிலையைப் பொறுத்து, "கர்த்தருடைய நாள்" என மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் "கர்த்தருடைய காலத்தில்" அல்லது "கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தண்டிப்பார்" அல்லது "கர்த்தருடைய கோபத்தின் காலத்தை" என்பவை அடங்கும்.
  • "கர்த்தருடைய நாளில்" என்பதை மொழிபெயர்க்கும் மற்ற வழிகள், "கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக் காலம்" அல்லது "கர்த்தராகிய இயேசு ஜனங்களை நியாயம் விசாரிக்கும்பொழுது" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: நாள், நியாயத்தீர்ப்பு நாள், ஆண்டவர், உயிர்த்தெழுதல், யெகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3068, H3117, G2250, G2962