ta_tw/bible/kt/daughterofzion.md

3.2 KiB

சீயோன் மகள்

வரையறை:

"சீயோன் மகளே" இஸ்ரவேல் ஜனங்களைக் குறிக்க ஒரு உருவகப்பூர்வ வழியாகும். இது பொதுவாக தீர்க்கதரிசனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • பழைய ஏற்பாட்டில், "சீயோன்" பெரும்பாலும் எருசலேம் நகருக்கு மற்றொரு பெயராக பயன்படுத்தப்படுகிறது.
  • "சீயோன்" மற்றும் "எருசலேம்" ஆகிய இரண்டும் இஸ்ரேலை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
  • "மகள்" என்ற வார்த்தை, அன்பான அல்லது பாசத்திற்குரிய வார்த்தையாகும். தேவன் தம்முடைய மக்களுக்காகக் கொண்டிருக்கும் பொறுமைக்கும் கவனிப்பிற்கும் ஒரு உருவகம் இது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இதை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் " சீயோனிலிருந்து என் மகளாகிய இஸ்ரவேல், " அல்லது எனக்கு ஒரு மகள் போல் "சீயோனிலிருந்து வந்தவர்கள், " அல்லது "சீயோனே, என் அன்பான ஜனங்களாகிய இஸ்ரவேல்" ஆகியவை அடங்கும்.
  • வேதாகமத்தில் பலமுறை பயன்படுத்தப்படுவதால், "சீயோன்" என்ற வார்த்தையை வைத்துக்கொள்வது சிறந்தது. ஒரு குறிப்பு அதன் உருவக அர்த்தத்தையும் தீர்க்கதரிசன பயன்பாட்டையும் விளக்குவதற்கு மொழிபெயர்ப்பில் சேர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பில் "மகள்" என்ற வார்த்தையை சரியாகப் புரிந்துகொள்ளும் வரை இது சிறந்தது.

(மேலும் காண்க: எருசலேம், தீர்க்கதரிசி, சீயோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1323, H6726