ta_tw/bible/other/written.md

3.2 KiB

இது எழுதப்பட்டிருக்கிறது

விளக்கங்கள்

“எழுதப்பட்டிருக்கிறபடியே” அல்லது “எழுதப்பட்டது எதுவோ” என்ற சொற்றொடர் புதிய ஏற்பாட்டில் அடிக்கடி காணப்படுகிறது. மேலும் பொதுவாக இது எபிரேய வேதவாக்கியங்களில் எழுதப்பட்ட கட்டளைகள் அல்லது தீர்க்கதரிசனங்களைக் குறிக்கிறது.

  • சிலநேரங்களில், “எழுதப்பட்டிருக்கிறபடியே” என்பது மோசேயின் நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டவைகளைக் குறிக்கிறது.
  • மற்ற நேரங்களில், தீர்க்கதரிசிகளில் ஒருவர் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டதை மேற்கோள் காட்டுவதாகவும் இருக்கிறது.
  • “மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டபடியே” அல்லது “அநேக நாட்களுக்கு முன்பு தீர்க்கதரிசிகள் எழுதியதைப்போல” அல்லது “நீண்ட காலத்திற்கு முன்பு மோசேயினால் எழுதப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணங்களில் சொல்லப்பட்டபடி” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “இது எழுதப்பட்டிருக்கிறது” என்பதை நிலைநிறுத்தும் இன்னொரு வழியையும், இதன் அர்த்தத்தை விளக்கும் அடிக்குறிப்பையும் கொடுக்கவும்.

(மேலும் பார்க்க: கட்டளை, நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3789, H7559, G1125