ta_tw/bible/other/walk.md

6.1 KiB

நட, நடக்கிறான், நடந்தான், நடத்தல்

விளக்கம்:

“நடத்தல்” என்ற வார்த்தை அடிக்கடி “வாழ்தல்” என்ற அர்த்தத்தில் உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • “ஏனோக்கு தேவனோடு நடந்தான்” என்பதன் பொருள் ஏனோக்கு தேவனோடு நெருக்கமான உறவுகொண்டு வாழ்ந்தான் என்பதாகும்.
  • “ஆவியில் நடத்தல்” என்பது தேவனுக்குப் பிரியமான, தேவனைக் கனப்படுத்தும்படியான காரியங்களைச் செய்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதாகும்.
  • தேவனுடைய கட்டளைகளில் அல்லது தேவனுடைய வழிகளில் “நடத்தல்” என்றால் “அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலோடு வாழ்தல்” அதாவது “ அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்” அல்லது “அவருடைய சித்தத்தைச் செய்தல்” என்று பொருளாகும்.
  • “அவர் அவருடைய மக்கள் மத்தியில் நடப்பார்” என்று தேவன் சொல்லும்போது அதன் பொருள் என்னவென்றால் அவர் அவர்கள் மத்தியில் வாழ்கிறார் அல்லது அவர்களுடன் முட நெருக்கமாக உறவாடுகிறார் என்பதாகும்.
  • “முரண்பாடாக நடத்தல்” என்றால் ஒரு நபருக்கு எதிராக அல்லது ஒரு காரியத்திற்கு எதிராகச் செயல்படுதல் அல்லது வாழ்தல் என்று பொருள்.
  • “பின்தொடர்ந்து நடத்தல்” என்றால் ஏதாவது ஒரு காரியத்தையோ அல்லது எந்தவொரு நபரையோ தேடுதல் அல்லது பின்பற்றுதல் என்று பொருள். மேலும், இன்னொருவரைப் போலவே செயல்படுதல் என்றும் அர்த்தமாகும்.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

  • “நடத்தல்” என்ற வார்த்தையை சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுமானால், அந்த வார்த்தையை எழுத்தின்படி அப்படியே மொழிபெயர்ப்பது சிறந்தது ஆகும்.
  • இல்லாவிட்டால், “நடத்தல்” என்ற வார்த்தையின் உருவகத்தை “வாழ்தல்”, அல்லது “செயல்படுதல்” அல்லது “நடக்கை” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “ஆவியானவரால் நடத்தல்” என்ற சொற்றொடரை “பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்படிந்து நடத்தல்” அல்லது பரிசுத்த ஆவியானவருக்குப் பிரியமாக நடந்துகொள்ளுதல்” அல்லது பரிசுத்த ஆவியாவரின் வழிநடத்துதலின்படி தேவனுக்குப் பிரியமான காரியங்களைச் செய்தல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “தேவனுடைய கட்டளைகளில் நடத்தல்” என்ற வாக்கியத்தை “தேவனுடைய கட்டளையின்படி வாழ்தல்” அல்லது “தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “தேவனோடு நடந்தான்” என்ற சொற்றொடரை “தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனப்படுத்தி, அவரோடு நெருக்கமான உறவில் வாழ்ந்தான்” என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: பரிசுத்த ஆவியானவர், கனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1869, H1979, H1980, H1981, H3212, H4108, H4109, G1330, G1704, G3716, G4043, G4198, G4748