ta_tw/bible/other/voice.md

2.8 KiB

குரல்,குரல்கள்

விளக்கம்:

பேசுதல் அல்லது ஒன்றைக்குறித்து தொடர்புகொள்ளுதலை குறிப்பதற்காக “குரல்” என்ற வார்த்தை அடிக்கடி உருவகமாக பயன்படுகிறது.

  • மனிதர்களைப் போன்ற குரல் தேவனுக்கு இல்லாவிட்டாலும்கூட, தேவன் தனது குரலைப் பயன்படுத்துகிறார்.
  • ““கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் “ என்று சொல்லுகிற ஒரு குரல் வனாந்திரத்தில் கேட்கிறது” என்ற இந்த வாக்கியத்தில் குரல் என்ற வார்த்தையை ஒரு முழு மனிதனைக் குறிப்பதற்காக பயன்படுத்தலாம்.
  • “ஒருவருடைய குரலைக் கேள்” என்பதை “ஒருவர் பேசுவதைக் கேள்” என்றும் மொழிபெயர்க்கலாம்,
  • வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது (பேசுகிறது) என்று தாவீது தன் சங்கீதத்தில் ஆச்சரியத்துடன் கூறுவதிலிருந்து, சிலநேரங்களில் “குரல்” என்ற வார்த்தையானது எழுத்தின்படி பேசாத பொருட்களைக் குறிக்கவும் பயன்படலாம். “அவைகளின் மகிமையானது தேவன் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுகிறது” என்றும் இதை மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: கூப்பிடு, அறிவி, மகிமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6963, H7032, H7445, H8193, G2906, G5456, G5586