ta_tw/bible/other/mourn.md

3.4 KiB

துக்கப்படு, புலம்புகிற, துக்கம், துக்கிக்கிறவர், புலம்புகிறவர்கள், துக்கம்நிறைந்த, துக்கமான

உண்மைகள்:

வார்த்தைகள் "துக்கம்" மற்றும் "புலம்புதல்" என்பது யாரோ ஒருவரின் மரணத்திற்கு பதில் பொதுவாக ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறது.

  • பல கலாச்சாரங்களில், துக்கத்தில் இந்த துயரத்தையும் புலம்பலையும் காட்டுகின்ற குறிப்பிட்ட வெளிப்புற நடத்தைகள் உள்ளன.
  • பூர்வ காலங்களில் இஸ்ரவேலர்களும் மற்ற குழுக்களும் உரத்த சத்தமிட்டு புலம்பினார்கள். அவர்கள் இரட்டு துணியால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து தங்கள்மீது சாம்பல் போட்டுக்கொண்டார்கள்.
  • புலம்புவதற்க்காக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள், பொதுவாக பெண்கள், மரித்த சரீரம், அடக்கம் செய்யப்படும் வரை அழுது புலம்புவார்கள்.
  • துக்கத்தின் வழக்கமான காலம் ஏழு நாட்களாக இருந்தது, ஆனால் முப்பது நாட்கள் வரை (மோசேக்கும் ஆரோனுக்கும்) அல்லது எழுபது நாட்கள் (யாக்கோபு போன்றவை) வரை நீடிக்கும்.
  • பாவத்தின் காரணமாக "புலம்புவது" பற்றி பேசுவதற்காக வேதாகமம் உருவகப்பூர்வ வார்த்தையை பயன்படுத்துகிறது. பாவம் தேவனையும் மக்களையும் துன்புறுத்துவதால் இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

(மேலும் காண்க: இரத்து உடை, பாவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H56, H57, H60, H205, H578, H584, H585, H1058, H1065, H1068, H1669, H1671, H1897, H1899, H1993, H4553, H4798, H5092, H5098, H5110, H5594, H6937, H6941, H6969, H7300, H8386, G2354, G2875, G3602, G3996, G3997