ta_tw/bible/other/horsemen.md

2.1 KiB

குதிரை வீரன், குதிரை வீரர்கள்

வரையறை:

வேதாகமக் காலங்களில், "குதிரைவீரர்" என்ற வார்த்தை போரில் குதிரைகளின் மீது அமர்ந்து போரிட்ட மனிதர்களைக் குறிக்கிறது.

  • குதிரைகளால் இழுக்கப்பட்ட இரதங்களில் சவாரிசெய்த மனிதர்கள் "குதிரை வீரர்கள்" என்று அழைக்கப்படலாம், ஆனால் இந்த வார்த்தை பொதுவாக குதிரைகளில் சவாரி செய்யும் ஆண்களை குறிக்கிறது.
  • போரில் குதிரைகளை பயன்படுத்துவது கர்த்தரைக்க் காட்டிலும் தங்களது பலத்தை வலியுறுத்திக் காட்டியது என்று இஸ்ரவேலர் நம்பினர், ஆகவே அவர்கள் பல குதிரை வீரர்களைக் கொண்டிருக்கவில்லை.
  • இந்த வார்த்தை "குதிரைசவாரி செய்பவர்கள்" அல்லது "குதிரையோட்டும் ஆண்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: இரதம், குதிரை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6571, H7395, G2460