ta_tw/bible/other/gold.md

4.0 KiB

தங்கம், தங்க

வரையறை:

தங்கம், நகை மற்றும் மத சம்பந்தமான பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு மஞ்சள் நிற, உயர்தர உலோகமாகும். பண்டைய காலங்களில் இது மிகவும் மதிப்பு வாய்ந்த உலோகமாகும்.

  • வேதாகமக் காலங்களில், பலவிதமான பொருள்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன அல்லது தங்கத்தின் மெல்லிய தகடுகளால் மூடப்பட்டன.
  • இந்த பொருட்கள் காதணிகளையும் பிற நகைகளையும், ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள அல்லது கோவிலில் பயன்படுத்தப்படும் சில விக்கிரகங்களையும், பலிபீடங்களையும், மற்ற பொருள்களையும், அதாவது உடன்படிக்கைப் பேழை போன்றவை உள்ளடக்கும்
  • பழைய ஏற்பாட்டு காலங்களில், தங்கம் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு பரிமாற்ற வழிமுறையாக பயன்படுத்தப்பட்டது. அதன் மதிப்பை தீர்மானிக்க ஒரு அளவு எடையும் இருந்தது.
  • பின்னர், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்கள் நாணயங்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன
  • திடமான தங்கம் இல்லாத ஒரு காரியத்தை குறிப்பிடும்போது, ​​ஆனால் தங்கத்தின் மெல்லிய மூடுதலால் மட்டுமே "தங்கம்" அல்லது "தங்கம் மூடப்பட்ட" அல்லது "தங்கம் முலாம் பூசப்பட்ட" எனவும் பயன்படுத்தலாம்.
  • சில நேரங்களில் ஒரு பொருளானது "தங்க நிற நிறமானது" என்று விவரிக்கப்படுகிறது, அதாவது தங்க நிற மஞ்சள் வண்ணம் உள்ளது, ஆனால் உண்மையில் தங்கத்தால் தயாரிக்கப்படாமல் இருக்கலாம்.

மேலும் காண்க: பலிபீடம், உடன்படிக்கைப் பெட்டி, பொய்யான கடவுள், வெள்ளி, ஆசரிப்புக்கூடாரம், கோவில்)

வேதாகமக்குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1220, H1222, H1722, H2091, H2742, H3800, H4062, H5458, H6884, H6885, G5552, G5553, G5554, G5557