ta_tw/bible/other/enslave.md

4.1 KiB

அடிமை, அடிமைகள், அடிமையாக்கப்பட்ட, பிணைப்பு, அடிமைத்தனம், பிணைப்புகள், பிணைக்கப்பட்ட

வரையறை:

யாராவது ஒருவரை அடிமைப்படுத்த என்பது ஒரு நபருக்கு அல்லது ஒரு ஆளும் நாட்டிற்கு சேவை செய்ய கட்டாயப்படுத்தி "அடிமையாக்குவதாகும்". "அடிமைப்படுத்தப்பட்ட" அல்லது "அடிமைத்தனத்தில் இருப்பது" என்றால், ஏதாவது ஒன்றின் அல்லது ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பதாகும்.

  • அடிமைப்படுத்தப்பட்ட அல்லது அடிமைத்தனம் செய்யப்பட்ட ஒரு நபர் பணம் பெறாமல் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர் தனக்கு விருப்பமானதைச் செய்ய அவருக்கு அனுமதியில்லை.
  • "அடிமையாக்கு" என்பது ஒரு நபரின் சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதாகும்.
  • "கட்டப்படுதல்" என்ற வார்த்தைக்கான மற்றொரு சொல் "அடிமைத்தனமாகும்."
  • உருவக அர்த்தத்தில், மனிதர்கள் தங்ககளை இயேசு பாவத்தின் வல்லமையிலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுவிக்கப்படும்வரைக்கும் பாவத்தினால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.
  • ஒரு நபர் கிறிஸ்துவில் புதிய வாழ்வைப் பெறுகையில், பாவத்திற்கு அடிமையாக இருப்பதை நிறுத்தி, நீதியின் அடிமையாகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "அடிமை" என்ற வார்த்தை "விடுவிக்கப்படக்கூடாது" அல்லது "மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகிற" அல்லது "மற்றவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிற" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "அடிமைப்படுத்தப்பட்ட" அல்லது "அடிமைத்தனத்தில்" என்ற சொற்றொடரை "ஒருநபரை " சேவை செய்ய கட்டாயப்படுத்து" அல்லது "கட்டுப்பாட்டின் கீழ்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: விடுதலை, நீதிமான், வேலைக்காரன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3533, H5647, G1398, G1402, G2615