ta_tw/bible/other/drinkoffering.md

3.1 KiB

பானபலி

வரையறை:

ஒரு பலிபீடத்தின்மீது திராட்சை இரசத்தை ஊற்றி பலிசெலுத்துவது, தேவனுக்குப் பானபலியாக இருந்தது. இது பெரும்பாலும் சர்வாங்க தகனபலியுடனும் போஜனபலியுடனும் சேர்ந்து செலுத்தப்பட்டது.

  • பவுல் தன் ஜீவனை பானபலியைப்போல ஊற்றுவதைக் குறிப்பிடுகிறார். இதன் பொருள் என்னவென்றால், தான் துன்பப்படவேண்டிவரலாம் அல்லது ஒருவேளை கொல்லப்படலாம் என்று அறிந்தாலும் தேவனைச் சேவிப்பதற்கும், இயேசுவைப் பற்றி மக்களுக்குச் சொல்லுவதற்கும் அவர் முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் என்பதாகும்.
  • சிலுவையில் இயேசுவின் மரணம் இறுதியான பானபலியாக இருந்தது; அவருடைய இரத்தம் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் ஊற்றப்பட்டன.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்றொரு வழி "திராட்சை இரச பலி என்பதாகும்."
  • பவுல் கூறுகையில், அவர் "பலியைப்போல ஊற்றப்படுகிறார்" என்பது "தேவனுடைய செய்தியை மக்கள் பலிபீடத்தின் மீதுபானபலியை ஊற்றுவதைப் போலவே, மக்களுக்கு தேவனுடைய செய்தியைக் கற்பிக்க முழுமையாக கடமைப்பட்டிருக்கிறேன்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: சர்வாங்க தகனபலி, போஜன பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5257, H5261, H5262