ta_tw/bible/other/dishonor.md

3.8 KiB

அவமானம், அவமதிப்பு, அவமதிக்கப்பட்ட,அவமதிப்பான

வரையறை:

"அவமானம்" என்ற வார்த்தை யாரையாவது அவமதிக்கும் ஒரு செயலைச் செய்வதாகும். இது அந்த நபருக்கு அவமானத்தை அல்லது அவமரியாதையை ஏற்படுத்தும்.

  • "அவமதிப்பாக" என்ற வார்த்தை வெட்கக்கேடான ஒரு செயலை விவரிக்கிறது அல்லது யாராவது அவமதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
  • சில நேரங்களில் "அவமதிப்பானது" என்பது முக்கியமாக எதையும் பொருட்படுத்தாத பொருள்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • பெற்றோர்களுக்குக்கனத்தைக்கொடுத்து, கீழ்ப்படிவதற்குக் குழந்தைகள் கட்டளையிடப்படுகிறார்கள். பிள்ளைகள் கீழ்ப்படியாதபோது, ​​அவர்கள் பெற்றோரை அவமதிக்கிறார்கள். அவர்கள் பெற்றோரை மதிக்காத விதத்தில் அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
  • பொய் தெய்வங்களை வழிபட்டு, ஒழுக்கக்கேடான நடத்தைகளைச் செய்தபோது இஸ்ரவேலர் யெகோவாவை அவமதித்தார்கள்.
  • யூதர்கள் அவரைப் பிசாசு பிடித்திருந்ததாகக் கூறி இயேசுவை அவமதித்தார்கள்.
  • இது "மரியாதைக்குரியது அல்ல" என்பதை "மரியாதைஇன்றி நடத்து" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "அவமரியாதை" என்ற பெயர்ச்சொல்லை "அவமதிப்பு" அல்லது "கௌரவ இழப்பு" என்று மொழிபெயர்க்கலாம்.
  • சூழலைப் பொறுத்து, "அவமதிப்பான" என்பதை "கௌரவம் இல்லாத" அல்லது "வெட்கக்கேடான" அல்லது "பயனற்ற அல்லது "மதிப்புமிக்கது அல்ல" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: அவமானம், கௌரவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1540, H2490, H2781, H3637, H3639, H5006, H5034, H6172, H6173, H7034, H7036, H7043, G818, G819, G820, G2617