ta_tw/bible/other/comfort.md

5.6 KiB

ஆறுதல், ஆறுதல்படுத்துகிற, ஆறுதல்படுத்தப்பட்ட, ஆறுதல்அளிப்பவர், ஆறுதல்அளிப்பவர்கள், ஆறுதல்படுத்தப்படாத,

வரையறை:

"ஆறுதல்" மற்றும் "ஆறுதல்படுத்துகிறவர்" ஆகிய சொற்கள் உடல் அல்லது உணர்ச்சி ரீதியிலான வேதனையை அனுபவிக்கும் ஒருவருக்கு உதவுவதைக் குறிக்கின்றன.

  • யாராவது ஒருவரை ஆறுதல்படுத்துகிற ஒரு நபரை "தேற்றுகிறவர்" என்று அழைக்கப்படுகிறார்.
  • பழைய ஏற்பாட்டில், தேவன் தம்முடைய ஜனங்களுடன் எவ்வாறு கனிவாகவும், அன்போடு நடந்துகொள்கிறாரென்றும், அவர்கள் துன்பப்படுகையில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் குறிப்பதற்காக "ஆறுதல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
  • புதிய ஏற்பாட்டில், தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் தமது மக்களை ஆறுதல்படுத்துவார் என்று கூறுகிறார். ஆறுதலை பெறுகிறவர்கள் துன்பப்படுகிறவர்களிடம் அதே ஆறுதலைக் கொடுக்க தகுதியுடையவர்களாகிறார்கள்.
  • "இஸ்ரவேலின் தேற்றரவாளன்" என்ற வார்த்தை, தம் மக்களை மீட்க வரப்போகும் மேசியாவைக் குறிக்கிறது.
  • இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு "ஆறுதலளிப்பவர்" என்று பரிசுத்த ஆவியானவரை குறிப்பிட்டார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, "ஆறுதல்" என்பது, "துயரத்தை எளிதாக்குவது" அல்லது " (யாராவது ஒருவருக்கு) துக்கத்தை சமாளிக்க"உதவுதல் அல்லது "ஊக்குவிக்க" அல்லது "ஆறுதல்படுத்துதல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "நம் ஆறுதல்" போன்ற சொற்றொடர் "நமது உற்சாகப்படுத்துதல்" அல்லது "யாராவது ஒருவருடைய ஆறுதலைக் குறிக்கிறது" அல்லது "துன்பப்படுகிற காலத்தில் நமது உதவி" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "ஆறுதல்படுத்துகிறவர்" என்ற வார்த்தை "ஆறுதலளிக்கும் நபர்" அல்லது "வலியை பொறுத்துக்கொள்ள உதவுகிறவர்" அல்லது "ஊக்கப்படுத்தும் நபர்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • பரிசுத்த ஆவியானவர் "தேற்றரவாளன்" என அழைக்கப்படுகையில் இது "ஊக்கமளிப்பவர்" அல்லது "உதவியாளர்" அல்லது "உதவியும் வழிகாட்டியுமானவர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "இஸ்ரவேலின் ஆறுதலளிப்பவர் என்ற " சொற்றொடர் "இஸ்ரவேலை ஆறுதல்படுத்துகிற மேசியாவாக" மொழிபெயர்க்கப்படலாம்.
  • "அவர்களுக்கு தேற்றவாளர் இல்லை என்பதை ", "யாரும் அவர்களை ஆறுதல்படுத்தவில்லை" அல்லது "அவர்களை உற்சாகப்படுத்த அல்லது உதவுவதற்கு யாரும் இல்லை" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: ஊக்கம், பரிசுத்த ஆவியானவர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2505, H5150, H5162, H5165, H5564, H8575, G302, G2174, G3870, G3874, G3875, G3888, G3890, G3931