ta_tw/bible/other/ash.md

3.5 KiB

சாம்பல், சாம்பல், தூசி

உண்மைகள்:

"சாம்பல்" அல்லது "சாம்பல்கள்" என்ற வார்த்தை, மரமானது எரிக்கப்பட்ட பின் விட்டுச்செல்லப்படும் சாம்பல் நிறத் தூள் என்பதை குறிக்கிறது. இது பயனற்றது அல்லது மதிப்பற்றது என்பதைக் குறிக்க சில சமயங்களில் உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • வேதாகமத்தில் சில சமயங்களில், சாம்பலைப் பற்றி பேசும்போது "தூசி" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இது உலர்ந்த தரையில் இருக்கும், தளர்வான மெல்லிய தூசுகளைக் குறிக்க முடியும்.
  • ஒரு "சாம்பல் குவியல்" என்பது குவிக்கப்பட்ட சாம்பல் ஆகும்.
  • பூர்வ காலங்களில், சாம்பலில் அமர்ந்திருப்பது துக்கங்கொண்டாடுவது அல்லது வருத்தப்படுவதற்கான அடையாளமாக இருந்தது.
  • துக்கமடைந்தபோது, ​​கடினமான, சொரசொரப்பான சணல் உடையை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து அல்லது தலையில் சாம்பலை தூவுவது வழக்கமாக இருந்தது.
  • தலை மீது சாம்பல் போடுவது அவமானம் அல்லது சங்கடமான அறிகுறியாகும்.
  • பயனற்ற ஏதோவொன்றிக்காக முயற்சியில் ஈடுபடுவது, "சாம்பலைக் கொடுப்பது போல" என்று கூறப்படுகிறது.
  • "சாம்பலை" மொழிபெயர்ப்பது போது, ​​மரம் எரிக்கப்பட்ட பிறகு எஞ்சியவற்றை குறிக்கும் வார்த்தையை திட்ட மொழியில் வார்த்தையைப் பயன்படுத்தவும்.
  • ஒரு "சாம்பல் மரம்" முற்றிலும் வேறுபட்ட வார்த்தையாகும் என்பதைக் கவனியுங்கள்.

(மேலும் காண்க: நெருப்பு, சணல் உடை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H80, H665, H666, H766, H1854, H6083, H6368, H7834, G2868, G4700, G5077, G5522