ta_tw/bible/names/pontus.md

2.2 KiB

பொந்தியு

உண்மைகள்:

ரோமானியப் பேரரசின் காலத்திலும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலும் ஆரம்ப சபையின் காலத்திலும் பொந்தியு இருந்து. அது இப்போது துருக்கி நாட்டின் வட பகுதியில், கருங்கடல் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ளது.

  • அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவாகியுள்ளபடி, பெந்தேகோஸ்தே நாளில் அப்போஸ்தலர்களிடம் பரிசுத்த ஆவியானவர் முதன்முதலாக வந்தபோது பொந்தியு மாகாணத்திலிருந்து வந்தவர்கள் எருசலேமில் இருந்தார்கள்.
  • ஆக்கில்லா என்ற ஒரு விசுவாசி பொந்தியுவில் இருந்தார்.
  • பல்வேறு பிராந்தியங்களில் சிதறிப்போன கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதுகையில், அவர் குறிப்பிட்டுள்ள பிராந்தியங்களில் ஒன்றான பொந்தியு ஆகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆகில்லா, பெந்தேகொஸ்தே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G4193, G4195