ta_tw/bible/names/peter.md

6.3 KiB
Raw Permalink Blame History

பேதுரு, சீமோன் பேதுரு, கேபா

உண்மைகள்:

பேதுரு இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்தார். ஆரம்பகால சபையின் முக்கிய தலைவராக அவர் இருந்தார்.

  • இயேசு அவரை சீஷராக அழைப்பதற்கு முன், பேதுருவின் பெயர் சீமோன்.
  • பிற்பாடு, இயேசு அவரை "கேபா" என்று பெயரிட்டார், அரமேயு மொழியில் "கல்" அல்லது "பாறை" என்று பொருள். பேதுரு என்ற பெயர் கிரேக்க மொழியில் "கல்" அல்லது "பாறை" என்று பொருள்படும்.
  • ஜனங்களை குணப்படுத்தவும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் பேதுரு மூலம் தேவன் கிரியை செய்தார்.

புதிய ஏற்பாட்டில் இரண்டு புத்தகங்கள், சக விசுவாசிகளை ஊக்குவிப்பதற்கும், கற்பிப்பதற்கும் பேதுரு எழுதிய கடிதங்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: சீடர், அப்போஸ்தலர்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 28:9 பேதுரு இயேசுவை நோக்கி, "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றினோம். எங்கள் வெகுமதி என்ன? "
  • 29:1 ஒரு நாள் __ பேதுரு __ இயேசுவை நோக்கி, "எஜமானே, என் சகோதரன் என்மேல் குற்றஞ்சாட்டும்போது அவனை எத்தனை முறை நான் மன்னிக்க வேண்டும்? ஏழு முறை? "
  • 31:5 அப்பொழுது பேதுரு இயேசுவிடம், "ஐயா, நீரேயானால் நீ தண்ணீரின்மேல்வரும்படி எனக்குக் கட்டளையிட வேண்டும்" என்றார். இயேசு பேதுருவிடம், "வா! என்று கூறினார்"
  • 36:1 ஒரு நாள், இயேசு தம் சீடர்களில் மூன்று பேரை, பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான் ஆகியோரை அவருடன் கூட்டிச் சென்றார்.
  • 38:9 பேதுரு மறுமொழியாக, "மற்றவர்கள் உம்மை விட்டுவிட்டாலும், நான் விடமாட்டேன்!" பிறகு, இயேசு பேதுருவிடம், "சாத்தான் உங்கள் அனைவரையும் சோதிக்க விரும்பினான். நான் உங்களுக்காக வேண்டிக்கொண்டேன். பேதுருவே உங்கள் விசுவாசம் ஒழிந்துபோகாதபடி உனக்காக ஜெபிக்கிறேன். ஆனாலும், இன்றையதினம் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் என்னை அறியாய் என்று மறுதலிப்பாய் என்றான்.
  • 38:15 போர்வீரர்கள் இயேசுவைக் கைதுசெய்தபோது, _பேதுரு_ தன் பட்டயத்தை எடுத்து, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை அறுத்துக்கொண்டான்.
  • 43:11 பேதுரு அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் பெற வேண்டும், அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார்."
  • 44:8 பேதுரு_ அவர்களிடம், "இந்த மனிதர் மேசியாவின் வல்லமையால் குணமடைந்தவர்."

சொல் தரவு:

  • Strong's: G2786, G4074, G4613