ta_tw/bible/names/peor.md

2.3 KiB

பெயோர், பேயோர் மலை, பாகால்

வரையறை:

"பெயோர்" மற்றும் " பேயோர் மலை," ஆகியவை மோவாபின் பிராந்தியத்தில் உப்புக் கடலின் வடகிழக்கில் அமைந்துள்ள ஒரு மலை என்பதைக் குறிக்கின்றன.

  • "பெத் பேயோர்" என்ற பெயர் ஒரு நகரத்தின் பெயராக இருந்தது, ஒருவேளை அந்த மலை அல்லது அதற்கு அருகில் அமைந்திருக்கலாம். இந்த மலையில் தேவன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் காட்டிய பிறகு மோசே இறந்துவிட்டார்.
  • "பாகால் பேயோர்" மோவாபியரின் பொய்யான கடவுளாய் இருந்தது, அவர்கள் பேயோர் மலையில் வழிபட்டு வந்தார்கள். இஸ்ரவேலர்களும் இந்த சிலையை வழிபாடு செய்ய ஆரம்பித்தார்கள், அதற்காக தேவன் அவர்களை தண்டித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாகால், [பொய் கடவுள், மோவாப், உப்பு கடல், வழிபாடு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1047, H1187, H6465