ta_tw/bible/kt/worship.md

6.4 KiB

ஆராதனை

விளக்கங்கள்

“ஆராதித்தல்” என்பது ஒருவருக்கு அதாவது குறிப்பாக தேவனுக்கு கனத்தை செலுத்தி, துதித்து, அவருக்குக் கீழ்படிவதாகும்.

  • இந்தப்பதமானது, அடிக்கடி எழுத்தின்படி, ஒருவரை தாழ்மையாக கனப்படுத்தும்படி, “தலை குனிந்து”´அல்லது “ஒருவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுதல்”என்று பொருள்படுகிறது.
  • நாம் அவரைத் துதித்தல் மூலமாகவும், கீழ்படிகிறதினாலும், அவருக்கு ஊழியம் செய்யும்போதும், அவரைக் கனப்படுத்தும்போதும் நாம் தேவனை ஆராதிக்கிறோம்.
  • இஸ்ரவேலர்கள் தேவனை ஆராதித்தபோது, பலிபீடத்தின் மேல் விலங்குகளை பலிசெலுத்துதல் ஆராதனையின் அங்கமாக இருந்தது.
  • சில மக்கள் பொய்யான தெய்வங்களை ஆராதித்தார்கள்.

மொழிபெயர்புக்கான சிபாரிசுகள்:

  • “ஆராதனை” என்ற பதத்தை, “தலை குனிந்து” அல்லது “கனப்படுத்தி சேவைசெய்தல்” அல்லது “கனப்படுத்தி கீழ்படிதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • சில பின்னணிகளில், “தாழ்மையாகத் துதித்தல்” அல்லது “கனம் செலுத்தித் துதித்தல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: பலி, துதி, கனம்)

வேதாகமக் குறிப்புக்கள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __13:4__பின்பு தேவன் அவர்களுக்கு உடன்படிக்கையை கொடுத்து, “நான் யேகோவா, உங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைசெய்த உங்களுடைய தேவன்” என்று சொன்னார். மற்ற தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம்.
  • 14:2 கானானியர்கள் தேவனை ஆராதிக்கவில்லை அல்லது கீழ்படியவில்லை. அவர்கள் பொய்யான தெய்வங்களை ஆராதித்து அநேக தீமையான காரியங்களைச் செய்தார்கள்.
  • 17:6 தாவீது, இஸ்ரவேலர்கள் தேவனை ஆராதித்து அவருக்குப் பலிசெலுத்துவதற்க்காக ஒரு தேவாலயத்தைக் கட்ட விரும்பினான்.
  • 18:12 இஸ்ரவேல் தேசத்தின் எல்லா இராஜாக்களும், அநேக மக்களும் விக்கிரகங்களை ஆராதித்தார்கள்.
  • 25:7 “சாத்தானே,என்னைவிட்டு அகன்று போ” என்று இயேசு மறுமொழி கொடுத்தார். தேவனுடைய வார்த்தையில் அவர் தமது மக்களுக்கு, “உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே ஆராதனை செய்து அவரை மட்டுமே சேவிக்கவேண்டும்” என்று கட்டளையிட்டார்.
  • 26:2 ஒய்வுநாளன்று, அவர் (இயேசு)ஆராதிக்கிற இடத்திற்குச் சென்றார்.
  • 47:1 அங்கே அவர்கள் வியாபாரம் செய்கிற லீதியாள் என்னும் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் தேவனை நேசித்து ஆராதித்தாள்.
  • 49:18 நீங்கள் ஜெபிக்கவும், அவருடைய வார்த்தைகளை கற்றுக்கொள்ளவும் மற்ற கிறிஸ்தவர்களோடு அவரை ஆராதிக்கவும், அவர் உங்களுக்குச் செய்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லவும் தேவன் உங்களிடம் கூறுகிறார்.

சொல் தரவு:

  • Strong's: H5457, H5647, H6087, H7812, G1391, G1479, G2151, G2318, G2323, G2356, G3000, G3511, G4352, G4353, G4573, G4574, G4576