ta_tw/bible/names/marymagdalene.md

2.2 KiB

மகதலேனா மரியாள்

உண்மைகள்:

மகதலேனா மரியாள் இயேசுவை விசுவாசித்து, அவருடைய ஊழியத்தில் தொடர்ந்து வந்த பல பெண்களில் ஒருவராக இருந்தார். ஏழு பேய்களிலிருந்து இயேசு குணமாகியிருந்தவர் என அவள் அறியப்பட்டாள்.

  • மகதலேனா மரியாளும் மற்ற பெண்களும் இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் கொடுத்து உதவினார்கள்.
  • மரித்தோரிலிருந்து எழுந்த இயேசுவை முதன்முதலில் பார்த்தவர்களுள் ஒருவராக அவர் குறிப்பிடப்படுகிறார்.
  • மகதலேனா மரியாள் வெற்று கல்லறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது இயேசு அங்கே நின்று, மறுபடியும் உயிரோடு இருப்பதை மற்ற சீஷர்களிடம் சொல்லும்படி சொன்னார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பிசாசு, பிசாசு பிடித்த)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G3094, G3137