ta_tw/bible/names/jonah.md

2.7 KiB

யோனா

வரையறை:

யோனா பழைய ஏற்பாட்டில் ஒரு எபிரெய தீர்க்கதரிசியாக இருந்தார்.

  • நினிவே மக்களிடம் பிரசங்கிப்பதற்காக யோனாவை தேவன் அனுப்பியபோது என்ன நடந்தது என்பதை யோனா புத்தகம் சொல்கிறது.
  • யோனா நினிவேக்குப் போவதற்கு மறுத்து, தர்ஷீசிக்கு ஒரு கப்பலில் வந்தார்.
  • தேவன் பெரும் புயல்காற்றை அனுப்பி அந்தக் கப்பலை மூழ்கடிகும்படி செய்தார்.
  • அவர் தேவனிடமிருந்து விலகிச் செல்வதாக கப்பலைக் ஒட்டுகிறவர்களிடம் சொன்னார்; அவர்கள் தன்னை கடல்மீது வீசிவிடும்படி அவர் சொன்னார். அவர்கள் அதைச் செய்தபோது புயல் நின்றது.
  • யோனா ஒரு பெரிய மீனினால் விழுங்கப்பட்டான், அவர் அந்த மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் மற்றும் இரவுகள் இருந்தார்.
  • அதன் பிறகு யோனா நினிவேக்குப் போய் அங்கு மக்களிடம் பிரசங்கித்தார், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து திரும்பிவிட்டார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கீழ்ப்படியாமை, நினிவே, திருப்பம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3124, G2495