ta_tw/bible/names/habakkuk.md

2.1 KiB

ஆபகூக்

உண்மைகள்:

இவர் யோயாக்கிம் ராஜா யூதாவின்மேல் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்த ஒரு பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாக இருந்தார். இந்த சமயத்தில் எரேமியா தீர்க்கதரிசி உயிரோடு இருந்தார்.

  • கி.மு. 600-ல் பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றி, யூதாவின் பல ஜனங்களை சிறைபிடித்து வந்தபோது இந்த தீர்க்கதரிசி ஆபகூக்கின் புத்தகம் எழுதினார்.
  • "கல்தேயர்"(பாபிலோனியர்கள்) எப்படி யூதாவின் ஜனங்களை வெற்றிகொண்டு, கைப்பற்றுவார்கள் என்பதைப் பற்றி யெகோவா ஆபகூக் தீர்க்கதரிசிக்கு தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார்.
  • ஆபகூக்கின் மிக நன்கு அறியப்பட்ட அறிக்கையில் ஒன்று: "நீதிமான் தன் விசுவாசத்தினாலே பிழைப்பான்."

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாபிலோன், யோயாகீம், எரேமியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2265