ta_tw/bible/names/benaiah.md

1.9 KiB

பெனாயா

வரையறை:

பெனாயா என்பது பழைய ஏற்பாட்டில் பல ஆட்களின் பெயராக இருந்தது.

  • யோய்தாவின் குமாரனாகிய பெனாயா தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் தாவீதின் பாதுகாவலர்களின் அதிகாரியாக இருந்தார்.
  • சாலொமோன் அரசனாக நியமிக்கப்பட்டபோது, ​​தன் எதிரிகளை அகற்றும்படி பெனாயா அவனுக்கு உதவினார். அவர் இறுதியில் இஸ்ரவேல் படைகளின் தளபதியாக ஆனார்.
  • பெனாயா என்ற பெயருள்ள மற்ற ஆண்கள் பழைய ஏற்பாட்டில் மூன்று பேர் உள்ளனர்: ஒருவர் ஆசாரியன், இன்னொருவர் இசைக்கலைஞர், மற்றும் ஆசாபின் வம்சாவளியினர்.

(மேலும் காண்க: ஆசாப், யோய்தா, லேவியன், சாலொமோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1141