ta_tw/bible/names/bashan.md

2.6 KiB

பாசான்

உண்மைகள்:

பாசான் கலிலேயாக் கடலின் கிழக்குப் பகுதி ஆகும். இது இப்போது சீரியா மற்றும் கோலன் உயர்ந்த பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.

  • பழைய ஏற்பாட்டு நகரமாகிய "கோலான்" என்றழைக்கப்பட்ட அடைக்கலப் பட்டணம் பாசான் பகுதியில் அமைந்துள்ளது.
  • பாசான், ஓக் மரங்களுக்கும் மற்றும் மேய்ச்சல் கால்நடைகளுக்கும் பிரபலமான ஒரு வளம்நிறைந்த பகுதியாகும்.

பல இராஜாக்கள் மற்றும் அவர்களது தேசங்களுக்கிடையிலான போர்த்தளமாக இருந்தது என்று ஆதியாகமம் 14 பதிவு செய்கிறது.

  • எகிப்திலிருந்து தப்பி ஓடிப்போன இஸ்ரவேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்த சமயத்தில் பாசானின் பிராந்தியத்தின் பகுதியை அவர்கள் கைப்பற்றினார்கள்.
  • பல வருடங்கள் கழித்து அந்தப் பகுதியிலிருந்து சாலொமோன் ராஜா சாமான்களை வாங்கினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எகிப்து, ஓக், கலிலேயக் கடல் , சீரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1316