ta_tw/bible/names/arabah.md

2.5 KiB

அரேபியா

தகவல்கள்:

பழைய ஏற்பாட்டில் “அரேபியா” என்றபதம் ஒருபெரிய பாலைவனம் மற்றும் சம பூமியையும் கொண்ட பகுதி இதன் பள்ளத்தாக்கு யோர்தான் நதியை சுற்றியுள்ள தெற்கு பகுதியிலிருந்து சிவந்த சமுத்திரத்தின் வட முனை வரை சூழ்ந்துள்ளது.

  • இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு செல்லும்போது இந்த பாலைவனத்தின் வழியாக பிரயாணம் செய்தனர்.
  • “அரேபியக்கடல்” என்பதை “அரேபிய பாலைவனத்தில் உள்ள கடல்” என்று மொழிபெயர்க்கலாம். இந்த கடல் பல நேரங்களில் “உப்புக்கடல்” அல்லது “சவக்கடல்” என்று குறிப்பிடப்படுகிறது.
  • “அரேபியா” என்ற பதம் பொதுவாகவே எந்த பாலைவன பகுதிக்கும் குறிப்பிடபடுகிறது.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: பாலைவனம், நாணல் கடல், யோர்தான் நதி, கானான், உப்புக்கடல், எகிப்து)

வேத ஆதாரங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H1026, H6160