ta_tw/bible/kt/hades.md

5.3 KiB

பாதாளம், சியோல்

வரையறை:

இறப்பையும் இறந்துபோகிற மக்களின் ஆத்துமாப் போகும் இடத்தையும் குறிக்கும்படி " பாதாளம் " மற்றும் "சியோல்" ஆகியவை வேதாகமத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களின் அர்த்தங்கள் ஒத்திருக்கிறது.

  • எபிரெய வார்த்தையான "சியோல்" பெரும்பாலும் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது, பொதுவாக மரணம் என்ற இடத்தில் குறிப்பிடப்படுகிறது.
  • புதிய ஏற்பாட்டில், கிரேக்க வார்த்தையான "ஹேட்ஸ்" தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்த ஆத்துமாக்களுக்காக ஒரு இடத்தைக் குறிக்கிறது. இந்த ஆத்மாக்கள் ஹேட்ஸ்ஸுக்கு "கீழிருந்து" செல்கின்றன. இது சில நேரங்களில் இயேசுவை நம்புகிற ஆத்துமா பரலோகத்திற்கு "செல்வதற்கு" முரண்பாடாக இருக்கிறது, வாழ்கிறது.
  • "ஹேட்ஸ்" என்ற வார்த்தை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் "மரணம்" என்ற வார்த்தையோடு இணைக்கப்பட்டுள்ளது. இறுதியில், மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலில் எறியப்படும், அது நரகமே.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • பழைய ஏற்பாட்டு கால "சியோல்" "இறந்தவரின் இடமாக" அல்லது "இறந்த ஆத்துமாவுக்கு இடம்" என மொழிபெயர்க்கப்படலாம். சில மொழிபெயர்ப்புகள் இந்த சூழலைப் பொறுத்து "குழி" அல்லது "மரணம்" என்று மொழிபெயர்க்கின்றன.
  • புதிய ஏற்பாட்டுக் கால "ஹேட்ஸ்" "விசுவாசமற்ற மரித்த ஆத்துமாக்களுக்கு இடமாக" அல்லது "இறந்தவர்களுக்காக வேதனைக்கு இடமாக" அல்லது "அவிசுவாசமான இறந்தவர்களின் ஆத்துமாக்களுக்காக இடம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சில மொழிபெயர்ப்புகள் "சியோல்" மற்றும் "ஹேட்ஸ்" போன்ற வார்த்தைகளை மொழிபெயர்ப்பின் மொழியின் ஒலி வடிவங்களுக்கு பொருந்துமாறு குறிப்பிடுகின்றன. (பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி
  • ஒவ்வொரு வார்த்தையையும் விவரிப்பதற்கு ஒரு சொற்றொடர் சேர்க்கப்படலாம், இதைச் செய்வதற்கான எடுத்துக்காட்டுகள், ", இறந்த மக்கள் இருக்கும் இடமாகிய சியோல் ," ", மரணத்தின் இடமாகிய" பாதாளம் போன்றவை.

(மொழிபெயர்ப்புக் குறிப்புகள்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: இறப்பு, சொர்க்கம், நரகம், கல்லறை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7585, G86