ta_tw/bible/kt/faithless.md

3.1 KiB

விசுவாசமற்ற, விசுவாசமற்ற நிலை

வரையறை:

"விசுவாசமற்ற" என்ற சொல்லானது, விசுவாசம் இல்லாத அல்லது விசுவாசிக்கவோ இல்லை என்பதாகும்.

  • தேவனில் நம்பிக்கை இல்லாத மக்களை குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் செயல்படாத ஒழுக்க நெறிகளால் அவர்களுடைய நம்பிக்கை இல்லாதது காணப்படுகிறது.
  • எரேமியா தீர்க்கதரிசி இஸ்ரவேலரை விசுவாசமற்றவர்களாகவும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும் குற்றஞ்சாட்டினார்.
  • அவர்கள் விக்கிரகங்களை வழிபட்டு, தேவனை வணங்காத அல்லது கீழ்ப்படியாத மற்ற தேவபயமற்ற மக்களின் பழக்கங்களை பின்பற்றினார்கள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • சூழ்நிலையைப் பொறுத்து, "விசுவாசமற்றவர்" என்ற வார்த்தையை "விசுவாசமற்ற" அல்லது "அவிசுவாசம்" அல்லது "தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்" அல்லது "நம்பாதவர்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "விசுவாசமின்மை" என்ற வார்த்தையை "விசுவாசமற்ற" அல்லது "நம்பிக்கையற்ற" அல்லது "தேவனுக்கு விரோதமாக கலகம்செய்தல்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் காண்க: நம்பிக்கை, உண்மை, கீழ்ப்படியாமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G571