ta_tw/bible/kt/elect.md

8.5 KiB

தேர்ந்தெடுக்கப்பட்டவர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தேர்வுசெய், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர், தேர்ந்தெடு

வரையறை:

"தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்ற வார்த்தையின் பொருள் "தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்" அல்லது "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை" குறிக்கிறது. தேவன் தம் மக்களை நியமித்திருக்கிற அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை குறிக்கிறது. "தெரிந்தெடுக்கப்பட்டவர்" அல்லது "தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்" என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மேசியாவாகிய இயேசுவை குறிக்கும் ஒரு தலைப்பு ஆகும்.

  • "தேர்வு" என்ற வார்த்தை ஏதாவது ஒன்றை அல்லது யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுப்பது அல்லது எதையாவது முடிவு செய்வது என்பதாகும். தேவனுக்குச் சொந்தமாக ஆவதற்கும் அவரை சேவிப்பதற்கும் மக்களை நியமிப்பதைக் குறிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
  • "தேர்ந்தெடுக்கப்பட்ட" என்பது " ஏதாவது செய்ய தெரிவு செய்யப்பட்ட" அல்லது "நியமிக்கப்பட்ட" என்பதாகும்.
  • மக்களை பரிசுத்தவான்களாக மாறுவதற்கு தேவன் தேர்ந்தெடுத்தார், நல்ல ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கும் நோக்கத்திற்காக அவரகளைப் பிரித்தெடுத்தார். அதனால்தான் அவர்கள் 'தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்' அல்லது 'தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • "தெரிந்தெடுக்கப்பட்ட " என்ற வார்த்தை சில சமயங்களில் தேவன் தமது மக்களின் மேல் தலைவர்களாக இருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட அதாவது மோசே, தாவீது ராஜா போன்ற சிலரை குறிப்பிட வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது,. இது இஸ்ரவேல் தேசத்தை தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாக குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • "தெரிந்தெடுக்கப்பட்ட" என்ற சொற்றொடர் பழைய வார்த்தையாகும், அதாவது "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" அல்லது "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்று அர்த்தம். கிறிஸ்துவின் விசுவாசிகளைக் குறிப்பிடும் போது மூல மொழியில் இந்த சொற்றொடர் பன்மையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பழைய ஆங்கில வேதாகம பதிப்பில், "தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்பது ("தேர்ந்தெடுக்கப்பட்டவர்(கள்)" என்ற வார்த்தையை மொழிபெயர்க்க பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நவீன பதிப்புகள் புதிய ஏற்பாட்டில் மட்டுமே இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்பட்ட மக்களைக் குறிக்க "தேர்ந்தெடுக்கப்பட்ட" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது,. வேதாகம வசனத்தில் வேறு எங்கும், அவர்கள் இந்த வார்த்தையை "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" என மொழிபெயர்க்கின்றனர்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" என்ற வார்த்தையை அல்லது "தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்று பொருள்படும் ஒரு வார்த்தையோ வாக்கியத்தையோ மொழிபெயர்ப்பது சிறந்தது. இது "தேவன் தெரிந்தெடுத்த ஜனங்கள்" அல்லது "தேவனால் தம்முடைய மக்களாக இருக்கும்படி நியமிக்கப்பட்ட " என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" என்ற சொற்றொடரை "நியமிக்கப்பட்டவர்கள்" அல்லது "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" அல்லது "தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்" என்பதை "நான் உன்னை நியமித்தேன்" அல்லது "நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்." என மொழிபெயர்க்கலாம்
  • இயேசுவைப் பற்றிகூறும்போது "தெரிந்தெடுக்கப்பட்டவர்", என்பதை "தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்" அல்லது "தேவனால் சிறப்பாக நியமிக்கப்பட்ட மேசியா" அல்லது "தேவனால் நியமிக்கப்பட்ட (மக்களை இரட்சிப்பதற்காக)" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: நியமனம், கிறிஸ்து)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H970, H972, H977, H1262, H1305, H4005, H6901, G138, G140, G1586, G1588, G1589, G1951, G4400, G4401, G4758, G4899, G5500