ta_tw/bible/kt/bornagain.md

4.8 KiB

மறுபடியும் பிறத்தல், தேவனால் பிறத்தல், புதிய பிறப்பு

வரையறை:

ஆவிக்குரிய விதமாக மரித்த அனுபவத்திலிருந்து உயிரோடு எழுப்பி தேவன் ஒரு நபரை மாற்றுவதற்கு என்ன அர்த்தம் என்பதை இயேசு விவரிப்பதற்கு "மீண்டும் பிறந்தார்" என்ற வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது. "தேவனால் பிறந்தவர்கள்" மற்றும் "ஆவியினால் பிறந்தவர்கள் " ஆகிய சொற்கள் புதிய ஆவிக்குரிய வாழ்க்கையை வழங்குவதைக் குறிக்கின்றன.

  • ஆவிக்குரிய மரணம் அடைந்த அனைத்து மனிதர்களும், இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது "புதிய பிறப்பு" கொடுக்கப்படுகிறார்கள்.
  • ஆவிக்குரிய புதிய பிறப்பின் வேளையில், தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் புதிய விசுவாசியுடன் தங்க ஆரம்பித்து, அவருடைய வாழ்க்கையில் நல்ல ஆன்மீக கனிகளைக் கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கிறார்.
  • ஒரு நபரை மறுபடியும் பிறக்கச் செய்து, அவரது பிள்ளையாக ஆக்குவதற்கு இது.தேவனுடைய வேலையாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "மறுபிறப்பு" என்பதை மொழிபெயர்க்க மொழிபெயர்க்கப்பட்ட பிற வழிகளில் "பிறப்பு புதிதாக" அல்லது "பிறந்து ஆவிக்குரியதாக" இருக்கலாம்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் மொழியில் சாதாரண வார்த்தையைப் பயன்படுத்துவது சிறந்தது.
  • "புதிய பிறப்பு" என்ற வார்த்தையை "ஆவிக்குரிய பிறப்பு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தேவனால் பிறந்தவர்" என்ற சொற்றொடர் "தேவனால் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல புதிய வாழ்வைப் பெறலாம்" அல்லது "தேவனால் புதிய வாழ்வை அளிக்கிறது" என மொழிபெயர்க்கலாம்.
  • அதே விதமாக, "பரிசுத்தஆவியினால் பிறத்தல்” என்பதை பரிசுத்த ஆவியானவர்" கொடுக்கும் புதியஜீவன் அல்லது "பரிசுத்த ஆவியானவரால் தேவனுடைய பிள்ளை ஆகும்படி" கொடுக்கப்பட்ட வல்லமை அல்லது "ஆவியினால் பிறப்பிக்கப்பட்டு புதிய வாழ்வைப் பெற்ற குழந்தை. "என மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: பரிசுத்த ஆவியானவர், இரட்சிப்பு))

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G313, G509, G1080, G3824