ta_tw/bible/kt/antichrist.md

4.0 KiB

அந்திக்கிறிஸ்து, அந்திக்கிறிஸ்துகள்

விளக்கம்:

“அந்திக்கிறிஸ்து “ என்ற பதம் ஒரு மனிதன் அல்லது கிறிஸ்துவுக்கும் அவரது ஊழியத்திற்கும் எதிராக போதித்தல் என்று குறிப்பிடலாம். இவ்வுலகில் அனேக அந்திக்கிறிஸ்துக்கள் உண்டு.

  • அபோஸ்தலனாகிய யோவான் எழுதும்போது இயேசு மேசியாவல்ல அல்லது இயேசுவின் தெய்வீகத்தையும் மனுஷஷீகத்தையும் மறுதலித்து பேசுவவனே அந்திக்கிறிஸ்து என்று கூறுகிறார்.
  • இயேசுவின் ஊழியத்திற்கு விரோதமாக போதிக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆவிகள் இவ்வுலகில் உண்டு என்று வேதம் போதிக்கிறது.
  • புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தின விசேஷத்தில் “அந்திக்கிறிஸ்து” என்ற மனிதன் கடைசி காலத்தில் தோன்றுவான் என்று விளக்குகிறது. இந்த மனிதன் தேவனுடைய பிள்ளைகளை அழிப்பதற்கு முயற்சிப்பான், ஆனால் இயேசுவால் முறியடிக்கப்படுவான்.

மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்:

  • மற்றொரு விதத்தில் இவ்வார்த்தையை அல்லது சொற்றொடரை “இயேசுவின் எதிராளி” அல்லது “இயேசுவின் எதிரி” அல்லது இயேசுவிற்கு எதிர்த்து நிற்பவன்” என்றும் மொழிப்பெயர்க்கலாம்.
  • அந்திக்கிறிஸ்துவின் ஆவி” என்ற பதத்தை “கிறிஸ்து விரோதமான ஆவி” அல்லது “இயேசுவைக் குறித்து பொய்யாய் போதித்தல்” அல்லது “இயேசுவைக் குறித்து பொய்யான காரியங்களை நம்பும் பழக்கம்” அல்லது “இயேசுவைக் குறித்து பொய்யாய் போதிக்கும் ஆவி” என்றும் மொழிப்பெயர்க்கலாம்.
  • உள்ளூர் மற்றும் தேசிய மொழிகளில் இவ்வார்த்தையை எப்படி மொழிப்பெயர்க்கலாம் என்றும் கவனத்தில்கொள்ளலாம். (பார்க்க: தெரியாதவைகளை எவ்வாறு மொழிப்பெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: கிறிஸ்து, வெளிப்பாடு, உபத்திரவம்)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G500