ta_tw/bible/kt/amen.md

5.3 KiB

ஆமென், உண்மையான

விளக்கம்:

“ஆமென்” என்ற வார்த்தை வலியுறுத்துவதற்கும் அல்லது ஒருவர் பேசினதை கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் பயன்படுத்தலாம் இந்த வார்த்தையை பல நேரங்களில் ஜெபத்தின் முடிவில் பயன்படுத்துவார்கள். சிலநேரங்களில் இது “உண்மையாகவே” என்று மொழிபெயர்க்கலாம்.

  • ஜெபத்தின் முடிவில் இவ்வார்த்தையை பயன்படுத்தும்போது, “ஆமென்” ஜெபத்தோடு ஒன்றிபோவதை வெளிப்படுத்துவது அல்லது ஜெபம் நிறைவேற்றப்படவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துவதாகம்.
  • இயேசுவின் போதனையில், “ஆமென்” என்பதை அவர் சொல்லிய சத்தியத்தை வலியுறுத்துவதற்காக பயன்படுத்தினார். பல நேரங்களில் “மேலும் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்று கூறுவது முந்தைய போதனையின் தொடர்ச்சியோடு இன்னொரு போதனையை அறிமுகப்படுத்துவதற்காக பயன்படுத்தினார்.
  • இயேசு “ஆமென்” என்ற வார்த்தையை பயன்படுத்தும்போது, சில ஆங்கில மொழிப்பெயர்ப்பில் மெய்யாகவே அல்லது உண்மையாகவே என்று மொழி பெயர்க்கலாம்
  • இன்னொரு விதத்தில் இவ்வார்த்தைக்கு “உண்மையாகவே” என்பதை “உறுதியாகவே” அல்லது “நிச்சயமாகவே” என்று மொழிபெயர்க்கலாம் மேலும் பேசுபவரின் பேச்சை வலியுறுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சொல்லுகிற வார்த்தையை வலியுறுத்துவதற்கு நாம் ஊழியம் செய்யும் மொழியில் ஏதேனும் வார்த்தையோ அல்லது வாக்கியத்தையோ கவனத்தில் கொள்ளவேண்டும்.
  • ஜெபத்தின் முடிவில் அல்லது சில காரியத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தும், “ஆமென்” என்பதை “அப்படியே ஆகட்டும்” அல்லது “அதுவே நடக்கட்டும்” அல்லது “அதுவே உண்மையாகட்டும்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்று இயேசு சொல்லியதை “ஆம், நான் நேர்மையாகவே உனக்கு சொல்லுகிறேன்” அல்லது “அது உண்மை, மேலும் நானும் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “மறுபடியும், மறுபடியும் நான் உனக்கு சொல்லுகிறேன்” என்பதை “நான் சொல்லுவதல்லாம் மிகவும் உண்மை” அல்லது “அதை உள்ளார்ந்த அக்கரையுடன் சொல்லுகிறேன்” அல்லது “நான் சொல்லுவதெல்லாம் உண்மை” என்றும் மொழிப்பெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: நிறைவேற்று, உண்மை)

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H543, G281